Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து.. டூப்ளசிஸுக்கு முகத்தில் படுகாயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி - வீடியோ

அபுதாபி: பிஎஸ்எல் போட்டியில் டூப்ளசிஸுக்கு முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 19வது லீக் போட்டியில் நேற்று கட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெசாவர் சல்மி அணிகள் மோதின.

 பிஎஸ்எல் போட்டி

பிஎஸ்எல் போட்டி

இந்த போட்டியில் பெசாவர் சால்மி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெசாவர் சால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கட்டா கிளாடியேட்டர்ஸ் 9 விக்கெட்களை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தோல்வியடைந்ததற்கு நட்சத்திர வீரர் டுப்ளசிஸ் காயத்தால் பாதிக்கப்பட்டது முக்கிய காரணமாக இருந்தது.

படுகாயம்

முதல் இன்னிங்சின் 7 வது ஓவரின் போது, பெசாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக டூப்ளசிஸ் முகம், ஹசனின் காலில் பட்டு படு மோசமாக விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர்

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் டூப்ளசிஸால் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. அவரின் காயம் தீவிரமாக இருந்தால், மேலும் சில போட்டிகளிலும் அவர் ஆட முடியாது எனக்கூறப்படுகிறது.

பின்னடைவு

பின்னடைவு

பிஎஸ்எல் தொடரின் இந்த சீசனில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசியாக உள்ளது. தற்போது நட்சத்திர வீரர் டூப்ளசிஸுக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் அந்த அணிக்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, June 13, 2021, 18:27 [IST]
Other articles published on Jun 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+