Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- காலின் மன்ரோவை கட்டி அணைத்த சிறுவன்.. சொல்லி கொடுத்ததை அப்படியே செய்து மகிழ்ச்சி

Colin Munro : பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து வீரர் முன்ரோவை சிறுவன் ஒருவன் கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இஸ்லாமாபாத் மற்றும் பிசாவர் அணிக்கு இடையிலான ஆட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணியில் சதாப்கான் அபாரமாக விளையாடி 51 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.

PSL 2024 - Colin Munro Hugs Ball boy after catch video wins the internet

இதில் ஆறு சிக்ஸர்களும் நான்கு பௌண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் இஸ்லாமாபாத் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து பெஷாவர் அணி பேட்டிங் செய்தது. அப்போது முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் இஸ்லாமாபாத் வீரர் அமீர் ஜமால் வீசிய பந்தை பஹிம் அஸ்ரப் சிக்ஸருக்கு அடித்தார்.

அப்போது அந்த பந்தை பிடிப்பதற்காக காலின் முன்றோ வந்தார். ஆனால் பந்து சிக்ஸ்லைன் தாண்டி விட்டது. எனினும் அங்கு நின்று கொண்டிருந்த பால் பாய் பந்தை பிடிக்க முயன்று கீழே விழுந்தார். இதனை அடுத்து, அந்த சிறுவனை அழைத்த நியூசிலாந்து வீரர் காலின் மன்றோ கேட்ச் எப்படி பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

இதனை அடுத்து சிறிது ஓவர் கழித்து ஆரிப் யாகுப் என்ற வீரர் சிக்ஸர் அடித்தார். அப்போது பந்து ஸ்கொயர் லெக் பக்கம் சென்றது. இம்முறை அந்த பால் பாய் வேகமாக ஓடி வந்து அபாரமாக சிக்ஸர் லைனுக்கு வெளியே கேட்ச் பிடித்தார். இதனை அடுத்து காலின் மன்றோ அந்த சிறுவனை வாழ்த்த வந்த போது அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் காலின் மன்ரோவை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனால் காலின் மன்ரோ அவரை கட்டி அணைத்து வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இறுதியாக பெஷ்வார் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. தற்போது வரை பிஎஸ்எல் தொடரில் முல்தான் அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Tuesday, March 5, 2024, 15:12 [IST]
Other articles published on Mar 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+