Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PSL 2025: ஐபிஎல் தொடருடன் ஒப்பிட்டு கேள்வி.. இங்கிலாந்து வீரரிடம் மொக்கை வாங்கிய பாகிஸ்தான் ஊடகம்

லாகூர்: ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. எப்போதும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த தொடரை வேண்டும் என்றே ஏப்ரல், மே மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரை பார்க்கும் மக்கள் அதிலிருந்து விலகி பிஎஸ்எல் தொடருக்கு வருவார்கள் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் போட்ட திட்டமாகும். ஆனால் தற்போது ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல் நடத்தப்பட்டு வருவதால் அது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறது.

Sam Billings

போட்டி நடைபெறும் கராச்சியில் 40 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய மைதானத்தில் வெறும் ஐந்தாயிரம் பார்வையாளர்களே வந்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களிடம் வேண்டுமென்றே ஐபிஎல் தொடருடன் ஒப்பிட்டு கேள்வி கேட்கப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் நீங்கள் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என இரண்டு தொடரிலும் விளையாடி இருக்கிறீர்கள். எந்தத் தொடர் சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என கேள்வியைக் கேட்டால், இதற்கு பதில் அளித்த சாம் பில்லிங்ஸ் நான் ஏதாவது முட்டாள்தனமான பதில் அளிப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

ஆனால் ஐபிஎல் தொடருடன் உலகத்தில் எந்த தொடரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஐபிஎல் தான் சிறந்த தொடர். உலகில் நடைபெறும் மற்ற தொடர்கள் எல்லாம் ஐபிஎல்க்கு பிறகு தான். ஏன் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட், தி 100 போன்ற தொடரும் ஐபிஎல்க்கு பிறகு தான் வரும்.

பிஎஸ்எல் தொடர் போல் நாங்களும் உலகின் இரண்டாவது சிறந்த தொடராக வர முயற்சி செய்கின்றோம். இதேபோல்தான் பிக் பாஸ் லீக் தொடரும் ஐபிஎல்க்கு பிறகு சிறந்த தொடராக வருவதற்கு தான் முயற்சி செய்து வருகிறார்கள் என்று பதிலளித்தார். ஐபிஎல் குறித்து எதிலும் விமர்சனம் தருவார் என்று பாகிஸ்தான் செய்தியாளர் நினைத்து கேள்வி கேட்ட நிலையில் அவரது மூக்கை உடைக்கும் விதமாக சாம்பில்லிங்ஸ் ஐபிஎல் தான் உலகின் சிறந்த தொடர் என பதில் அளித்துள்ளார். லாகூர் குலாந்தர்ஸ் அணிக்காக விளையாடும் சாம் பில்லிங்ஸ் குயோட்டா கிளாடியேட்டர் அணிக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 16, 2025, 14:01 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+