கராச்சி: ஐபிஎல் தொடர் பாணியில் பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் என்ற டி20 தொடரை நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. தற்போது பத்தாவது சீசன் நடைபெற்ற வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கு பெற்றிருக்கிறார்கள். எப்போதும் பி எஸ் எல் தொடர் பிப்ரவரி மார்ச் மாதத்தில் தான் நடைபெறும்.ஆனால் ஐபிஎல் போட்டியை நிலை குலைக்கும் விதமாக வேண்டுமென்றே ஏப்ரல், மே மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்தி இருக்கிறது.
எனினும் ஐபிஎல் போட்டியாக நடத்தப்படும் இந்த தொடரில் பல காமெடி சம்பவங்கள் நடைபெற்று வருவது தான் ஹாட் நியூஸாக இருக்கின்றது. ஏப்ரல் 12ஆம் தேதி கராச்சி கிங்ஸ் அணியும் முல்தான் சுல்தான் அணியும் மோதியது. இதில் முல்தான் சுல்தான் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.

இதில் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். எனினும் இந்த இலக்கை கராச்சி கிங்ஸ் அணி 19.2 வது ஓவரிலேயே எட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 12 ரன்களில் ஆட்டம் இழக்க, டிம் செஃபர்ட் 32 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வீன்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பொதுவாக இது போன்ற ஆட்டநாயகன் விருது வாங்கும் வீரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்.
கூடவே ஒரு ட்ராபியையும் வழங்குவார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உச்சபட்ச காமெடி ஒன்றை செய்திருக்கிறது. ஆட்ட நாயகன் விருது வென்ற ஜேம்ஸ் வின்சுக்கு தலை முடியை காய வைக்கும் ஹேர் டிரையர் மிஷினை பரிசாக வழங்கியிருக்கிறது. இதை பார்த்தவுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த அனைத்து வீரர்களும் சிரித்து விட்டார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.