Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PSL - ஷாகின் ஓவரில் 3 சிக்சர் அடித்த பொலார்ட்.. இருவரும் மோதி கொண்ட அனல் பறக்கும் வீடியோ

லாகூர் : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடப்பு சீசனில் பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவு வீரர்களுக்கிடையே சண்டை, முன்னாள் வீரர்கள் விமர்சனம் என பாலிவுட் திரைப்படங்கள் போல் மசாலா நிறைந்த தொடராக உள்ளது.

இந்த நிலையில் முதல் பிளே ஆப் ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அப்ரீடியும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொலார்டும் மோதிக்கொண்ட காட்சி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

மோதல்

மோதல்

முதல் குவாலிபயர் ஆட்டத்தில் லாகூர் அணியும் முல்தான் அணியும் கடாபி மைதானத்தில் மோதினர். இந்த ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் முல்தான் அணிக்காக விளையாடிய பொலார்ட் அபாரமாக மூன்று சிக்ஸர்களை அடித்தார். இந்த ஓவர் வீசிய சாகின் அப்ரிடி செம கடுப்பாகி கோபத்தில் பொலார்டை திட்டினார். இதற்கு பொலார்டும் பதிலடி கொடுக்க இருவரும் மோதிக் கொள்வது போல் அருகில் சென்று கண்டபடி திட்டிக் கொண்டனர்.

அரைசதம்

அரைசதம்

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது. இந்த இன்னிங்ஸ் மூலம் போல அரை சதம் கடந்தார். இந்த ஆட்டத்தில் ரிஸ்வான் தலைமையிலான முல்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .டாஸ் வென்று முதலில் பேட் செய்த முல்தான் அணியில் பொலார்ட் 34 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

76 ரன்களல் அவுட்

76 ரன்களல் அவுட்

இதேபோன்று ரிஸ்வான் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் முல்தான் அணி 160 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதில் லாகூர் அணியின் கேப்டன் சாகின் அப்ரிடி நான்கு ஓவரில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.இதனை அடுத்து களமிறங்கிய நடப்புச் சாம்பியன் ஆன லாகூர் அணி 76 ரன்களில் ஆட்டம் இழந்தது .

மீண்டும் ஒரு வாய்ப்பு

இதன் மூலம் முல்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இறுதிப் போட்டிக்கு செல்ல லாகூர் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது . இஸ்லாமாபாத் மற்றும் பெஸ்வார் அணிக்கு இடையிலான எலிமினேட்டர் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் லாகூர் அனி நாளை மோதும். இந்த தொடரின் இறுதி போட்டி வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 16, 2023, 23:54 [IST]
Other articles published on Mar 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+