Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கோப்பையை கைப்பற்றிய கராச்சி கிங்ஸ்... அசாம் அபாரம்

கராச்சி : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கலந்தர் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்றது.

இதில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வெற்றி கொண்டு தன்னுடைய முதல் வெற்றிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 49 பந்துகளில் 63 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைப்பு

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ப்ளே-ஆப் சுற்றுடன் கடந்த சனிக்கிழமை தொடர் மீண்டும் துவங்கியது.

லாகூர் -கராச்சி அணிகள் மோதல்

லாகூர் -கராச்சி அணிகள் மோதல்

இதன் இறுதிப்போட்டி லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கிடையில் கராச்சியின் தேசிய மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 134 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் 135 ரன்களை இலக்காக அந்த அணி கராச்சிக்கு கொடுத்தது.

63 ரன்களை குவித்த அசாம்

63 ரன்களை குவித்த அசாம்

இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் பாபர் அசாம் 49 பந்துகளில் 63 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். போட்டியை அந்த அணியின் கேப்டன் இமாத் வாசிம் பவுண்டரி மூலம் முடித்து வைத்தார். கராச்சி கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து தன்னுடைய முதல் பிஎஸ்எல் கோப்பையை கைப்பற்றியது.

500,000 டாலர் பரிசுத்தொகை

500,000 டாலர் பரிசுத்தொகை

இந்த சேஸிங்கில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து கராச்சி அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியை அடுத்து அந்த அணிக்கு கோப்பை மற்றும் 500,000 டாலருக்கான காசோலை பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ரன்னர் அப்பாக வந்த லாகூர் அணிக்கு 200,000 டாலர் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

Story first published: Wednesday, November 18, 2020, 11:56 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+