Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6000 ரன்கள்... 26 அரைசதங்கள்... 18 சதங்கள்... டெஸ்ட் போட்டிகளில் அதிரடி மன்னனின் அசத்தல் சாகசம்

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் சத்தீஸ்வர் புஜாரா 77 ரன்களை அடித்துள்ளார்.

இந்த போட்டியின்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் சாதனையை அவர் எட்டியுள்ளார். இதன் சராசரி 48.

மேலும் இந்த 6000 ரன்களில் 26 அரைசதங்கள் மற்றும் 18 சதங்களும் அடக்கம்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி ஆடிய டெஸ்ட் போட்டிகளின் அசத்தல் வீரர் சத்தீஸ்வர் புஜாரா 77 ரன்களை குவித்துள்ளார். ரிஷப் பந்த்துடன் அவர் இந்த போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

6000 ரன்கள் சாதனை

6000 ரன்கள் சாதனை

இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை அடித்து இன்றைய போட்டியில் சாதனை மேற்கொண்டுள்ளார். இதன் சராசரி 48ஆக உள்ளது. மேலும் இந்த 6000 ரன்களில் 26 அரைசதங்கள் மற்றும் 18 சதங்களும் அடக்கம். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

ரிஷப்புடன் பார்ட்னர்ஷிப்

ரிஷப்புடன் பார்ட்னர்ஷிப்

கடந்த போட்டியில் சொதப்பி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான புஜாரா, இன்றைய போட்டியில் நிதானமான மற்றும் நிலையான ஆட்டத்தை அளித்துள்ளார். ரிஷப் பந்த்துடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்துள்ளார். இதன்மூலம் தான் டெஸ்ட் போட்டிகளில் எப்போதுமே கிங் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் சிறப்பு

டெஸ்ட் தரவரிசையில் சிறப்பு

இன்றைய போட்டியில் அவர் சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரை ஆஸ்திரேலிய பௌலர்கள் பொய்யாக்கினர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் 7வது இடத்தில் உள்ள புஜாரா, தொடர்ந்து அடுத்த போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, January 11, 2021, 12:40 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+