Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசாகிடுச்சு.. இன்னும் எதுக்கு டீமில் வச்சு இருக்கீங்க.. சிக்கலில் "மூத்த" வீரர்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் அடுத்தடுத்து சொதப்பி வருவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் இளம் பவுலிங் படையில் நடராஜன் 3 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், ஷரத்துல் தாக்கூர் 3 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த நிலையில் இன்று இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்திய அணி தற்போது 5 விக்கெட்டிற்கு 171 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

எப்படி

எப்படி

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்றும் மோசமாக ஆடி சொதப்பி உள்ளனர். அதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா இன்றும் சரியாக ஆடவில்லை. 94 பந்துகள் பிடித்தவர் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். புஜாராவின் இன்றைய ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

 சிறப்பாக இல்லை

சிறப்பாக இல்லை

அதன்படி இந்த டெஸ்ட் தொடர் முழுக்க புஜேரா பெரிய அளவில் இந்திய அணிக்கு பங்கு அளிக்கவில்லை. ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் புஜாரா 70+ ரன்கள் எடுத்தார். மற்ற எந்த போட்டியிலும் புஜாரா சரியாக ஆடவில்லை. இவர் டெஸ்ட் வீரர் என்பதால் ஐபிஎல் போட்டியில் ஆடவில்லை. இதனால் புஜாரா மொத்தமாக பார்ம் இழந்து உள்ளார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

கடந்த ஒரு வருடமாக புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆட முடியாமல் திணறி வருகிறார். இந்திய அணியில் இருக்கும் மூத்த டெஸ்ட் வீரர்களில் புஜாராவும் ஒருவர். இவருக்கு தற்போது 32 வயது ஆகிறது.

பார்ம்

பார்ம்

இந்திய அணியில் இவர் இன்னும் 3-4 வருடங்கள் அதிகபட்சம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுவரை புஜாரா பார்மில் இருப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது இவர் இருக்கும் பார்மில் இந்திய அணியில் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பு இல்லை.

புஜாராவின் இடம்

புஜாராவின் இடம்

ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மண்ணில் இவர் மோசமாக சொதப்புவது தொடர்கிறது. புஜாராவின் இடத்தை பிடிக்க இந்திய அணியில் பல வீரர்கள் முயன்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் புஜாரா பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Sunday, January 17, 2021, 9:07 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+