Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் சொதப்பிய சீனியர்கள்.. இந்திய அணியிலிருந்து நீக்கம்?

கான்பூர் ; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி , இரண்டாவது இன்னிங்சில் மதிய நேர உணவு இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணியின் மூத்த வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகியோர் இரண்டாவது இன்னிங்சில் ரன் குவித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.

Pujara and Rahane Fails again vs Newzeland 1st Test

முதல் இன்னிங்சில் 26 ரன்கள் மட்டுமே எடுத்த புஜாரா, 2வது இன்னிங்சில் வெறும் 22ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். கடைசியாக 2019 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். அதன் பின் 38 இன்னிங்சாக புஜாரா சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.சொந்த மண்ணில் அவர் சதம் விளாசி 19 இன்னிங்ஸ் ஆகிறது.2021ஆம் ஆண்டு புஜாரா22 இன்னிங்சில் விளையாடி 639 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

புஜாராவை விட மிகவும் ஆபத்தில் இருப்பது ரஹானேவின் இடம் தான். முதல் இன்னிங்சில் 35 ரன்கள் எடுத்த ரஹானே, இர்ண்டாவது இன்னிங்சில் 4 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார். கடைசி 21 இன்னிங்சில் அவர் வெறும் 411 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் வெறும் 2 அரைசதங்களே அடங்கும். இந்த ஆண்டில் ரஹானே அடித்த ஸ்கோர்கள் (22,4,37,24,1,0,67,10,7,27,49,15,5,1,61,18,10,14,0,35,4)

வரும் 3ஆம் தேதி தொடங்கும் மும்பை டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி திரும்புகிறார். ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசியுள்ளார். இதனால் ரஹானேவுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்க கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விஹாரி, அபிமன்யூ ஈஸ்வரன், பிரியாங் பாஞ்சால் உள்ளிட்ட இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்து உள்ளதால் தென்னாப்பிரிக்கா தொடரிலும் ரஹானே இடம்பெறுவது சந்தேகம் தான்.

Story first published: Sunday, November 28, 2021, 12:37 [IST]
Other articles published on Nov 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+