Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 5 நாட்கள் விளையாடி புஜாரா சாதனை

கொல்கத்தா: இலங்கைக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக புஜாரா விளையாட வந்தார்.

Pujara bats on all five days, enters record books

117 பந்துகளில் 52 ரன்களை எடுத்துள்ளார் புஜாரா. இன்று 5-ஆவது நாளாக தொடர்ந்து விளையாடுகிறார். ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரர்களின் பட்டியலில் உலக அளவில் 8-ஆவது இடத்தையும், இந்திய அளவில் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

நடுவே, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியபோதிலும், நாள் கணக்கை வைத்து பார்த்தால் புஜாரா 5 நாட்கள் ஆடியதாக கணக்கு வந்துள்ளது.

புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்த இரு இந்திய வீரர்கள்- எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் தற்போதைய இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி.

1960-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எம்.எல். ஜெயசிம்ஹா 20 ரன்களையும், 1984-ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு எதிராக விளையாடிய ரவி சாஸ்திரி 111 ரன்களையும் பெற்றனர். இந்த மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடி சாதனை படைத்தோரின் பட்டியல்

  • எம்.எல். ஜெய்சிம்ஹா (இந்தியா)
  • ஜியாஃப்ரே பாய்காட் (இங்கிலாந்து)
  • கிம் யூகேஸ் (ஆஸ்திரேலியா)
  • ஆலம் லாம்ப் (இங்கிலாந்து)
  • ரவி சாஸ்திரி (இந்தியா)
  • ஆட்ரியன் கிரிஃப்த் (மேற்கு இந்திய தீவுகள்)
  • ஆண்ட்ரூ ஃபிளின்ட்டாப் (இங்கிலாந்து)
  • சேதேஸ்வர் புஜாரா (இந்தியா)
Story first published: Monday, November 20, 2017, 12:02 [IST]
Other articles published on Nov 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+