Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டு வீரனா சில காலம்... உத்தம புருஷனா சில நேரம்.. கலக்கும் புஜாரா

டெல்லி : இந்திய அணியின் பேட்ஸ்மேனாக இருக்கும் தன்னால் வீட்டின் ஆல்ரவுண்டராக செயல்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சத்தீஸ்வர் புஜாரா.

Recommended Video

மனைவி, மகளுடன் சில நேரம்.. அசத்தும் புஜாரா

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல்லும் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், தங்களது மனைவிக்கு வீட்டுவேலை செய்தும், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தும் காலத்தை கடத்துகின்றனர்.

வீட்டில் முடங்கிய வீரர்கள்

வீட்டில் முடங்கிய வீரர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000ஐ நெருங்கியுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இனிமையான நேரம்

வீட்டில் இனிமையான நேரம்

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அனைவரும் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் தாங்கள் செலவழிக்கும் இனிமையான நேரத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஐசிசி, மற்றும் பிசிசிஐ-ம் இந்த பணியை செய்து வருகிறது.

குழந்தையுடன் நேரம் செலவழிப்பு

குழந்தையுடன் நேரம் செலவழிப்பு

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன் சத்தீஸ்வர் புஜாரா, தன்னுடைய மனைவி பூஜா, மற்றும் குட்டி மகளுடன் தன்னுடைய நேரத்தை இனிமையாக செலவிட்டு வருகிறார். மேலும் டிவி பார்ப்பது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது போன்ற பணிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார் புஜாரா. ஆனால் பாதி நேரம் தன்னுடைய குழந்தையுடன் செலவழிப்பதிலேயே போவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

பிசிசிஐ புகைப்படம்

மேலும் தன்னுடைய மனைவி பூஜாவிற்கு, வீட்டை சுத்தம் செய்வது போன்ற அன்றாட வேலைகளில் உதவி செய்வதாக புஜாரா குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் செலவிட்ட இனிமையான தருணங்களை பிசிசிஐ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஞ்சி கோப்பையில் வெற்றி

ரஞ்சி கோப்பையில் வெற்றி

இந்தியா இறுதியாக விளையாடிய நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெற்ற சத்தீஸ்வர் புஜாரா, அங்கிருந்து நாடு திரும்பி ரஞ்சிக் கோப்பையில் சௌராஷ்டிரா அணியின் இறுதிப்போட்டியில் இடம்பெற்று, அந்த அணி கோப்பையை வெல்ல தானும் காரணமாக விளங்கினார். இறுதிப்போட்டியில், இவர் அடித்த 66 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Sunday, March 29, 2020, 13:39 [IST]
Other articles published on Mar 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+