Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது.. புஜாரா டெஸ்ட் பிளேயரா.. ? டி20 போட்டியில் அடித்து நொறுக்கி அசத்தல்.. தப்பு செய்த சிஎஸ்கே

இந்தூர் : டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட புஜாரா சமீப காலமாக அதிரடி காட்டி வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புஜாரா மெதுவாக விளையாட கூடிய வீரர் என்பதால், அவரை எந்த அணியும் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்காது. அப்படி தப்பி தவறி ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணியும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரவில்லை.

இந்த நிலையில், நடப்பாண்டில் புஜாரா ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடினார். இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

புஜாராவின் மறுமுகம்

புஜாராவின் மறுமுகம்

சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 112 என்றும் மிரட்டலாக இருந்தது. புஜாரா ஒட்டுமொத்தமாக 107 ரன்கள் ,174 ரன்கள் ,49 ரன்கள் ,66 ரன்கள், 132 ரன்கள் என 624 ரன்கள் குவித்தார். குறிப்பாக அந்தத் தொடரில் புஜாரா டி20 களில் பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போல் அதிரடியை காட்டினார்.புஜாரா பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் இருந்தாலும் அவர் வெறும் 30 ஐபிஎல் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

குறிப்பாக 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற புஜாரா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அதே புஜாரா ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் 131 பந்துகளில் 174 ரன்கள் விளாசினார். இதைப் போன்று மற்றொரு ஆட்டத்தில் ஒரே ஓவரில் 22 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் சையது முஸ்தாக் அலி தொடரில் புஜாரா விளையாடினார்.

27 பந்தில் அரைசதம்

27 பந்தில் அரைசதம்

இதில் நாகலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா பட்டையை கிளப்பினார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புஜாரா, 35 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 177ஆகும்.

அதிகரித்த மவுசு

அதிகரித்த மவுசு

இதனால், புஜாராவை கழற்றிவிட்டு சிஎஸ்கே பெரிய தவறு செய்து விட்டதாக கருதப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஏலம் நடைபெறுகிறது. இதில் புஜாராவுக்கு செம மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல அணிகளும் போட்டி போட்டு, புஜாராவை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புஜாராவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்பபு வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 14, 2022, 19:21 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+