Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை விட்டு வெளியேறும் புஜாரா.. வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி.. என்ன நடந்தது?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் புஜாரா புதிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த புஜாரா, கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார்.

இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் புஜாரா, ரஹானே ஆகியோர் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

702 ரன்கள்

702 ரன்கள்

புஜாரா கடந்த ஆண்டு ரன்களை சேர்க்க முயற்சித்தாலும், அதனை அவர் பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் திணறினார். முக்கிய கட்டத்தில் காலை வாரியதால் தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புஜாரா,14 போட்டிகளில் விளையாடி 702 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் ஏமாற்றம்

ஐபிஎல் ஏமாற்றம்

இந்த நிலையில், புஜாரா கடந்த முறை ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் விளையாடினார். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் புஜாராவை சிஎஸ்கே அணி எடுக்கவில்லை. இதே போன்று வேறு எந்த அணியும் புராவை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானேவை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து பயணம்

இதனால் விரக்தியில் உச்சத்தில் புஜாரா இருந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் வந்து விளையாட வாய்ப்பு வழங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத புஜாரா, உடனே ஒப்புக் கொண்டுள்ளார். கவுண்டி கிரிக்கெட் அணியான SUSSEX அணியில் புஜாரா 2 மாதம் விளையாட உள்ளார்.

Recommended Video

Pandya, Pujara, Rahane get demoted in BCCI central contracts | OneIndia Tamil
கவுண்டி கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்

இதற்காக இம்மாதம் இறுதியில் புஜாரா இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். வரும் 7ஆம் முதல் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத போது எல்லாம் புஜாரா இங்கிலாந்துக்கு சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதற்கு தயாராகும் வகையில் புஜாரா இந்த முடிவை எடுத்துள்ளார்.

Story first published: Thursday, March 10, 2022, 16:44 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+