Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 3 போட்டிகள்... புது கேப்டன்... புது துணை கேப்டன்... அதிரடி கிளப்புமா இந்திய அணி!

மெல்போர்ன் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்காமல் தனது குழந்தை பிறப்பிற்கென நாடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து அணியின் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே செயல்பட உள்ளார்.

Pujara is the Vice-Captain in Tests with Rahane named as the captain

இந்நிலையில் சத்தீஸ்வர் புஜாரா துணை கேப்டனாக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை 2வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில் அடுத்த 3 போட்டிகளில் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த போட்டிகளில் துணை கேப்டனாக சத்தீஸ்வர் புஜாரா செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பியுள்ளார். இதேபோல காயம் காரணமாக முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதையடுத்து இந்த அணிக்கு ஆஸ்திரேலிய அணி மிகுந்த சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த டெஸ்ட் மூலம் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை முகமது சிராஜ் மற்றும் சுப்மன் கில் விளையாட உள்ளனர்.

Story first published: Friday, December 25, 2020, 13:41 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+