For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா, ரஹானே ரெண்டுபேரும் டெஸ்ட்டோட பில்லர்ஸ் மாதிரி... இத நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நாளை துவங்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டியையொட்டி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசினார்.

புஜாரா சரியாக விளையாடாதது குறித்து விமர்சனங்களை சந்தித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள கோலி, இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான வீரர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

விராட் செய்தியாளர் சந்திப்பு

விராட் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி நாளை துவங்கி நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் விராட் கோலி பேசினார். அப்போது தான் ஒரு கிரிக்கெட் வீரராக தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

சிறப்பாக எதிர்கொள்வார்

சிறப்பாக எதிர்கொள்வார்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடாத புஜாரா விமர்சிக்கப்படுவதை சுட்டிக் காட்டியுள்ள கோலி, முன்னதாக வெளிநாட்டில் சிறப்பாக விளையாடாமல் அவர் இத்தகைய விமர்சனங்களை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளார். புஜாராவிற்கு இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியும் என்றும் கூறியுள்ளார்.

புஜாரா, ரஹானே முக்கியம்

புஜாரா, ரஹானே முக்கியம்

இந்திய டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் முக்கியமான வீரர்கள என்று தெரிவித்துள்ள கோலி, தான் முன்னதாக இதுகுறித்து பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 4வது போட்டியில் பும்ரா இல்லாததை தவிர்த்து பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வெற்றியில் முழுகவனம்

வெற்றியில் முழுகவனம்

தன்னை பொருத்தவரையில் இந்தியாவிற்கான போட்டிகளை வெற்றி பெறுவதில் மட்டுமே முழுகவனமும் உள்ளதாகவும் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகவும், அதையும் மீறி சாதனைகளை படைப்பது மிகவும் சிறப்பானது என்றும் கோலி மேலும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 3, 2021, 15:50 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
My focus is to win matches for India -Virat Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+