Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

160 பந்துகள்... 43 ரன்கள்... நிதானம் தேவைப்பட்டுச்சு... எந்த வருத்தமும் இல்ல... புஜாரா உறுதி

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை அடித்துள்ளது.

முதல் நாள் போட்டியில் 160 பந்துகளில் 43 ரன்களை அடித்துள்ளார் புஜாரா. இந்நிலையில், இதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. டாஸ் வென்று இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துள்ளது.

புஜாரா நிதான ஆட்டம்

புஜாரா நிதான ஆட்டம்

இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது சத்தீஸ்வர் புஜாரா 160 பந்துகளில் 43 ரன்களை அடித்து நிதானமாக ஆடினார். 148 பந்துகளுக்கு பிறகே முதல் பவுண்டரியை அவர் அடித்திருந்தார். இந்த மெதுவான ஆட்டம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

வருத்தம் இல்லை

வருத்தம் இல்லை

இந்நிலையில் தான் மிகவும் ஸ்லோவாக ஆடியது குறித்து எந்த வருத்தமும் கொள்ளவில்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார். துவக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டியது அவசியம் என்பதை தான் உணர்ந்திருந்ததாகவும் அதனால்தான் மெதுவாக விளையாடியதாகவும் அவர் கூறினார்.

சிறப்பாக அமைந்தது

சிறப்பாக அமைந்தது

இந்திய அணி 244 ரன்களில் முதல் இன்னிங்சை முடித்துள்ள நிலையில், 350 ரன்களை அடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். முதல் இரண்டு செஷன்களில் இந்திய அணி சிறப்பாகவே காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிதானம் அவசியம்

நிதானம் அவசியம்

டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட பொறுமை மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பௌலர்களுக்கு சாதகமாக போட்டி அமையும்போது, நாம் அடித்து விளையாடுவது சாத்தியமில்லை என்றும் புஜாரா கூறினார். வெளிநாடுகளில் விளையாடும் சூழலில் 200க்கும் குறைவான ரன்களை எடுப்பது சிறப்பாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Friday, December 18, 2020, 11:48 [IST]
Other articles published on Dec 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+