Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும்.. மீண்டும்.. சொதப்பும் சீனியர்.. இதுக்கு இல்லையா ஒரு எண்ட் கார்டு..??

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

மழை காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டதால் போட்டி தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 80 ரன்களில் இழந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரர் புஜாரா ரசிகர்களை கடுப்பேற்றினார்.

டக் அவுட்

டக் அவுட்

3வது நபராக களத்திற்கு வந்த புஜாரா, வெறும் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார். ஏஜாஸ் பட்டேல் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட போது, அது திரும்பி புஜாராவின் ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. எப்போதும் நிதானமாக ஆடும் புஜாரா எதற்கு இப்படி அவசரப்பட்டார் என்று தெரியவில்லை.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

கான்பூர் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 26 ரன்கள் மட்டுமே எடுத்த புஜாரா, 2வது இன்னிங்சில் வெறும் 22ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். கடைசியாக 2019 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். அதன் பின் 38 இன்னிங்சாக புஜாரா சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.சொந்த மண்ணில் அவர் சதம் விளாசி 19 இன்னிங்ஸ் ஆகிறது.2021ஆம் ஆண்டு புஜாரா23 இன்னிங்சில் விளையாடி 639 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

நீக்கம்

நீக்கம்

ஏற்கனவே அணியில் சொதப்பிய சீனியர் வீரர் ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி, அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது புஜாராவும் சொதப்பி வருவதால், அவரும் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Recommended Video

Shubman Gill கண்டிப்பா இருப்பாரு.. New Zealand தொடருக்கு Pujara கொடுத்த Update
இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக களமிறங்கியுள்ள விஹாரி, அரைசதம் விளாசியுள்ளார். இளம் வீரர் சாஃபிராஸ் கான் நல்லஇன்னிங்சை ஆடியுள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன், பிரியாங் பஞ்சால் போன்ற வீரர்களம் வாய்ப்புக்காக வெகு நாட்களாக காத்துள்ளனர். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்..

Story first published: Friday, December 3, 2021, 18:33 [IST]
Other articles published on Dec 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+