
பலமின்றி பலனின்றி
இதில் பலரும் சொல்வது, "இந்தியா நிச்சயம் வெற்றிப் பெற்றிருக்கும். மழை வெற்றி வாய்ப்பை கெடுத்துவிட்டது" என்பது தான். அது உண்மையும் கூட. கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 150+ ரங்களே தேவைப்பட்டது. கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமிருந்தது. தலைக்கு 30 ரன்கள் அடித்திருந்தாலே இந்தியா வெற்றிப் பெற்றிருக்கும். ஆனால், இன்னும் கொஞ்சம் டீப்பாக சென்று பார்ப்போமே!. இந்தியாவின் பலவீனம் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எதுவென்று நினைக்கிறீர்கள்? நான் நினைப்பது மிடில் ஆர்டர். அதாவது, இந்தியாவின் முதுகெலும்பு நலிந்து பலமின்றி பலனின்றி போயிருக்கிறது என்பேன். டாப் ஆர்டர் ஓகே.. லோ ஆர்டர் மகிழ்ச்சி.. பவுலிங் அதகளம்.. ஆனால் மிடில் ஆர்டர்? இந்த மிடில் ஆர்டர் முதல் டெஸ்ட்டின் கடைசி நாளில் இந்தியாவை வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்ய வைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

பந்துகளும், பர்கரும்
புஜாரா, கோலி, ரஹானே ஆகியோரின் ஆட்டத்தில் இன்டென்ட் இருக்கிறதா? என்பது நமது முதல் கேள்வி. சந்தேகமும் கூட. சமீபத்தில்.. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் பங்கு என்பது மிகக் மிகக் குறைவு. ஒரு சதம் கூட அடிக்கவில்லை. குறைந்தபட்சம் அணிக்கு தேவையான ரன்களை கூட எடுத்து தர முடியவில்லை. கடந்த ஆண்டின் இறுதியில், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடராகட்டும், இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடராகட்டும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகட்டும்.. இவ்வளவு ஏன்.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அநியாய விலையில் தனது விக்கெட்டை இழந்ததாகட்டும்.. அவரது பேட்டிங் எபிலிட்டி முற்றிலும் தொடர்ச்சியாக ஃபெயில் ஆகிறது. பந்துகளை சாப்பிடுகிறார் என்ற குறையெல்லாம் ஒரு குறையே அல்ல. டெஸ்ட் போட்டிகளில் பந்துகளை சாப்பிடாமல், பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது.

2 வருடங்கள்
அவர் முதல் ரன்னை அடிக்க 100 பந்துகளை கூட எடுத்துக் கொள்ளட்டும்.அதுதான் அவரது பாணி என்றால் பிரச்சனையே அல்ல. ஆனால், சிக்கல் என்னவெனில் அவர் 101வது பந்தில் அவுட்டாகிவிடுவது தான். லைன் அன்ட் லெந்த் பந்துகளாக இருந்தாலும் கல்லு மாதிரி நிற்பதால் தான் புஜாராவுக்கு மதிப்பு. மற்றபடி அவர் ரோஹித்தோ, ரிஷப் பண்ட்டோ கிடையாது. ஆனால், அப்படி அசையாமல் நிற்கும் அவரது கன்சிஸ்டன்சி தான் தற்போது உடைந்திருக்கிறது. தொடர்ந்து அவரது பேட்டிங் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கேப்டன் விராட் கோலியின் நிலைமையும், கிட்டத்தட்ட இதற்கு சமம் என்றால் அது மிகையாகாது. கோலி எப்போதாவது அரைசதம் அடிக்கிறார். எப்போதாவது. அவ்வளவு தான். மற்றபடி அவரால் அந்த அரை சதத்தை சதமாகவோ அல்லது பெரிய ஸ்கோராகவோ கன்வெர்ட் செய்வதில் தவறவிடுகிறார். மறந்துவிடாதீர்கள். கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.

மீண்டு வாங்க புஜாரா?
ரஹானே.. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சதம் அடித்திருந்தவர், அதன் பிறகு ஒரு இன்னிங்ஸில் கூட தனக்கான, தன்னுடைய, தன் ஒரிஜினாலிட்டியை அவர் நிரூபிக்கவே இல்லை. ஸோ, இந்த மூவரும் தொடர்ந்து சொதப்பி வருவது தான் இந்திய அணியின் ஒரே பலவீனம் என்பேன். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நாம் சரி செய்யய வேண்டிய விஷயம் இது ஒன்று தான். முதலில் புஜாரா தனது பேட்டிங் திறன் மீது நம்பிக்கை வேண்டும். தன் ஷாட்ஸ்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தன்னால் பந்துகளை க்ளீயர் செய்ய முடியும் என்பதை நம்ப வேண்டும். தென்னாப்பிரிக்காவில் 2ம் இன்னிங்ஸில் இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் அடித்திராத 153 ரன்கள் அடித்த வீரன் நான் என்பதை அவர் நியாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை எந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டரும் சந்திக்காத அளவுக்கு 525 பந்துகளை ஒரே இன்னிங்ஸில் சந்தித்த பெருமைக்குரியவன் நான் என்பதையும் அவர் உணர வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தன்னை மிஞ்ச இங்கு எவருமில்லை என்ற கர்வமும், ஆணவமும் அவருக்கு தேவை. அவர் மீண்டு வந்துவிட்டால் நமக்கு கிடைக்கப் போகும் பலன்களில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? எதிரணி ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்டாமினா முற்றிலும் அடிவாங்கும். புஜாராவை வீழ்த்த முடியாமல் அவர்களது கைகள் திணறும். பிரஷர் அதிகரிக்கும், தவறுகள் நடக்கும். லூஸ் பந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நமது ராகுல் டிராவிட், காலம் காலமாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நகர்த்தியது இந்த பாணியில் தான். மீண்டு வாங்க புஜாரா!


Click it and Unblock the Notifications