Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. கோபத்தில் பேட்டை தூக்கி அடித்த புஜாரா.. என்ன ஆச்சு?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா அவுட்டான விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னையில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து 578 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஜோ ரூட் 218 ரன்களை இதில் குவித்தார்.

எப்படி

எப்படி

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 378 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும். தற்போது அஸ்வின், சுந்தர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

புஜாரா

புஜாரா

இந்த போட்டியில் இந்திய அணிக்காக புஜாரா மிகவும் அதிரடியாக ஆடினார். எப்போதும் பொறுமையாக ஆடும் புஜாரா இன்று அதிரடி காட்டினார். அடுத்தடுத்து பல முறை பவுண்டரி அடித்து மாஸ் காட்டினார்.

பவுண்டரி

பவுண்டரி

இன்று மாலை எல்லாம் பிட்ச் கஷ்டமாக மாறிவிடும் என்பதால் புஜாரா முடிந்த அளவு வேகமாக ஆடி பாலோ ஆனை தவிர்க்க முயன்றார். இதற்காக வேகமாக இவர் ஆடி நம்பிக்கை அளித்தார். இவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள்.

விக்கெட்

விக்கெட்

இந்த நிலையில் 51வது ஓவரை வீசிய டாம் பெஸ் ஓவரில் புஜாரா அவுட் ஆனார். அப்போது டீப் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை புஜாரா பறக்கவிட்டார். ஆனால் இது ஷார்ட் ஸ்கோயர் லெக் திசையில் இருந்த வீரரின் ஹெல்மெட்டில் பட்டு வேகமாக பறந்தது.

மோசம்

மோசம்

ஹெல்மெட்டில் பட்டு பறந்த பந்தை சில்லி மிட் ஆன் திசையில் இருந்த வீரர் தாவி கேட்ச் பிடித்தார். ஆம் இன்னொரு வீரரின் ஹெல்மெட்டில் பட்டு பறந்த பந்தை வேறு ஒரு வீரர் பிடித்து புஜாராவை அவுட் செய்தார். இதை பார்த்து புஜாரா கடுப்பானார்.

கோபம்

கோபம்

எப்போதும் களத்தில் கோபம் அடையாத புஜாரா இன்று கோபம் அடைந்தார். கோபமாக பேட்டை தூக்கி தரையில் அடித்தார். இப்படி அதிர்ஷ்டம் இல்லாமல் அவுட் ஆகிவிட்டோமே என்று கடுமையாக கோபம் அடைந்தார்.

Story first published: Sunday, February 7, 2021, 22:05 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+