Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஒருநாள் போட்டியில கலக்கிய வீராங்கனைகள்... பூனம் ராவட் சதம்... ஹர்மன்பிரீத் அரைசதம்!

லக்னோ : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையில் 4வது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங்கை துவங்கி 267 ரன்களை இலக்காக அமைத்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பூனம் ராவத் சதமடித்துள்ளார். இந்த தொடரில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்த அவர் தற்போது சதமடித்துள்ளார்.

4வது ஒருநாள் போட்டி

4வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையில் லக்னோவில் ஒருநாள் தொடரின் 4வது போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்களை எதிரணிக்கு இலக்காக வைத்துள்ளனர்.

இந்திய மகளிர் சிறப்பு

இந்திய மகளிர் சிறப்பு

இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக அணியின் பூனம் ராவத் இன்றைய போட்டியில் சதமடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் அவர் அரைசதத்தை கடந்துள்ளார். அதாவது அவுட்டாகாமல் 62 ரன்களையும் 77 ரன்களையும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் அடித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் அரைசதம்

ஹர்மன்பிரீத் அரைசதம்

மேலும் இந்த தொடரில் அவர் அதிக ரன்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகளையும் அவர் அடித்துள்ளார். இதனிடையே இன்றைய போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் 45 ரன்களையும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமும் அடித்துள்ளனர். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம்.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்

2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்

இதனிடையே இன்றைய போட்டியில் இந்திய மகளிரின் ஆட்டத்தின் இறுதியில் ஹாட்ஸ்டார் மற்றம் தொலைக்காட்சி வாயிலான லைவ் போட்டியை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின்மீது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள விருப்பம் அதிகரித்துவருவது தெரியவருகிறது.

Story first published: Sunday, March 14, 2021, 15:56 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+