Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்..ஹைதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது புனே !

ஹைதராபாத்: ஹதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி வெற்றது.

ஹைதராபாத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற 44 லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில், நெஹ்ரா, பிபுல் சர்மா அணிக்கு திரும்பினர். புனே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Pune beat Hyderabad by 12 runs

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 34 ரன்னும், அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ் 25 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். டோணி 21 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களம் கண்டது. தவான் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 4 ரன்களில் நடையை கட்டினார்.

அடுத்து வார்னருடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 34 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ஆட்டம் இழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த யுவராஜ் 43 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால் ஆட்டம் புனே பக்கம் திரும்பியது.

ஹைதராபாத் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது, இந்த ஓவரை உனத்கட் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பிபுல் சர்மா (8) அவுட்டானார். அடுத்த பந்தில் ரசித் கான் (3) வெளியேறினார். ஹாட்ரிக் பாலை எதிர்கொண்ட புவனேஷ்வர் (0) சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டாகியதால் ஹாட்ரிக் சாதனைப் படைத்தார் உனத்கட்.

கடைசி இரண்டு பந்திலும் ரன் ஏதும் எடுக்க முடியாததால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய உனத்கட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை 12 போடிகளில் விளையாடியுள்ள புனே அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

Story first published: Saturday, May 6, 2017, 22:51 [IST]
Other articles published on May 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+