Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேப்பாக்கமாகிறது புனே மைதானம்... ரசிகர்களின் விசிலுடன் களமிறங்குகிறது சிஎஸ்கே!

Recommended Video

ஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி

புனே: சிங்கத்தை போட்டோல பார்த்திருப்ப, சினிமால பார்த்திருப்ப, டிவில பார்த்திருப்ப, ஏன் கூண்டுலகூட பார்த்திருப்ப. கம்பீரமா காட்டுல நடந்து பார்த்திருப்பியா, வெறித்தனமா வேட்டையாடி பார்த்திருக்கியா. இது சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ள சிஎஸ்கே அணியின் வீரர்களின் மனதில் ஓடும் வசனம். இதே வசனத்தோடு ஆயிரம் ரசிகர்கள் சென்னையில் இருந்து சிறப்பு ரயிலில் புனேவுக்கு சென்றுள்ளனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று நடக்கும் 16வது போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிஎஸ்கே திரும்பியுள்ளதால், சென்னையில் மீண்டும் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தனர். இதனிடையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.

புனேவில் முதல் போட்டி

புனேவில் முதல் போட்டி

அதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த அடுத்த 6 போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. அதன்படி, சிஎஸ்கே அணி புனேயில் தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் நாளை மோத உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்தப் போட்டியைக் காண்பதற்காக, ஆயிரம் ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனேவுக்கு சென்றுள்ளனர்.

புனே மைதானம் மாறுகிறது

புனே மைதானம் மாறுகிறது

இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தின்போது, சென்ன சேப்பாக்கம் மைதானத்தை மனதில் கொண்டே, சிஎஸ்கே அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மைதானம் மிகவேகப் பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானதாகும். தற்போது புனே மைதானமும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் போலவே மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே அறிந்த மைதானம்

ஏற்கனவே அறிந்த மைதானம்

சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தபோது, புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக, சிஎஸ்கே கேப்டன் டோணி விளையாடியுள்ளார். அவரைத் தவிர தற்போது சிஎஸ்கே அணியில் உள்ள டுபிளாசி, ஷர்துல் தாகுல், இம்ரான் தாகிர் ஆகியோரும் புனே அணிக்காக விளையாடியுள்ளனர். அதனால், மைதானத்தின் தன்மை அவர்களுக்கு தெரியும்.

சிஎஸ்கேவீன் மூன்றாவது வீடு

சிஎஸ்கேவீன் மூன்றாவது வீடு

ஜார்க்கண்டைச் சேர்ந்த டோணிக்கு சென்னை இரண்டாவது தாய் வீடு. தற்போது புனே மூன்றாவது வீடாக மாறியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்துக்கு இணையாக புனே மைதானம் தயாராகி வருகிறது. அதைத் தவிர சென்னையில் இருந்து சிஎஸ்கே ரசிகர்களும் புனேவுக்கு படையெடுத்துள்ளனர். அதனால், நாளை நடக்கும் போது கிட்டத்தட்ட சென்னையில் நடப்பது போலவே இருக்கும்.

Story first published: Thursday, April 19, 2018, 14:08 [IST]
Other articles published on Apr 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+