வாழ்க்கையில் சோர்வு.. மாஜி கிரிக்கெட் வீரர் மனைவி தற்கொலை
புனே: முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் அவரது தாயார் வீட்டில் பிணமாகக் கிடந்தார்.
புனேவில்தான் பரீனிதியின் தாயார் வீடு உள்ளது. அங்கு அவர் தனது அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது தற்கொலை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவர்கள் மீட்டுள்ளனராம். அதில், தான் தனது வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளாராம் பரீனிதி.

46 வயதான பரீனிதி தனது தாயாருடன் புனே வீட்டில் வசித்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். இவருக்கும், சலீல் அங்கோலாவுக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
Story first published: Monday, December 23, 2013, 7:56 [IST]
Other articles published on Dec 23, 2013


Click it and Unblock the Notifications