Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப்பை வீழ்த்தி தொடர் தோல்வியைத் தவிர்த்தது புனே வாரியர்ஸ்

Yuvraj Singh
மொஹாலி: தொடர்ந்து பெற்று வந்த தோல்விகளுக்கு ஆறுதல் தேடும் வகையில் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது புனே வாரியர்ஸ்.

தொடர்ந்து தோல்விகளைத் தழுவி புண்ணாகிப் போயிருந்த அணி புனே வாரியர்ஸ். இந்த நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் புனே மோதியது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய புனே வாரியர்ஸ், முதலில் பந்து வீசி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களில் நிறுத்தியது. ஷான் மார்ஷ் 32, திணேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய புனே அணி, 17.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டும் இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் யுவராஜ் சிங் 35 ரன்களும், மனீஷ் பாண்டே 28 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+