Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கொடுமை சார் இது..?? ஃபார்மில் இல்லாத வீரருக்கு ரூ.11.5 கோடி கொடுத்த பஞ்சாப்..!!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் இன்று இரண்டாவது நாளாக பெங்களூருவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளில் விட்டதை, கடைசி நாளில் பிடிக்க அனைத்து அணிகளும் முயற்சித்தனர்.

பல அணிகள் தேவையான 18 வீரர்களை எடுக்காமல் மௌனம் காத்தன. சில அணிகள் இருக்கும் பணத்தை வைத்து விளையாடியது.

பின்வாங்கிய சிஎஸ்கே

பின்வாங்கிய சிஎஸ்கே

குறிப்பாக இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனுக்காக அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. லிவிங்ஸ்டோனை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டியது. கொல்கத்தாவும் உள்ளே புகுந்ததால் விலை மளமளவென எகிறியது. வழக்கம் போல் 3 கோடி ரூபாயை தாண்டியவுடன் சென்னை அணி பின் வாங்கியது.

11.5 கோடி

11.5 கோடி

இதன் பின் களத்திற்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் லிவிங்ஸ்டோனுக்காக கொல்கத்தா அணியுடன் மோதினர். இதனால் நம் ஊரில் உள்ள பெட்ரோல் விலை போல் வீரரின் ஏலத் தொகையும் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒரு கோடி ரூபாயாக இருந்த அவரது அடிப்படை விலை 11 கோடியே 50 லட்சம் வரை சென்று பஞ்சாப் அணி வாங்கியது.

ஏன் இவ்வளவு பணம்

ஏன் இவ்வளவு பணம்

லிவிங்ஸ்டோன் கிடைத்ததும் பஞ்சாப் அணி வீரர்கள் உற்சாகத்தில் எகிறி குதித்தனர். ஏன் என்றால் பஞ்சாப் அணியின் தொடக்கமும், இறுதியும் பலமாக அமைந்துவிட்டது. ஆனால் நடுவரிசையில் ஒரு ஓட்டை இருந்தது. அதனை லிவிங்ஸ்டோனை வைத்து அடைத்துவிட்டதாக பஞ்சாப் நினைக்கிறது. மேலும் அவர் சுழற்பந்து வீசவும் செய்வார் என்பது கூடுதல் தகவல்.

லிவிங்ஸ்டோன் ஃபார்ம்

லிவிங்ஸ்டோன் ஃபார்ம்

ஆனால் பஞ்சாப் அணியின் துரதிர்ஷ்டமோ, என்னவோ அவர் கடந்த சில மாதங்களாக ஃபார்மில் இல்லை. கடைசியாக அவர் அரைசதம் அடித்து 10 இன்னிங்ஸ்க்கு மேல் ஆகிறது. ஆனால் திறமையான வீரராக அறியப்படும் லிவிங்ஸ்டோன் பார்ம்க்கு வந்துவிடுவார் என்று பிரித்தி ஜிந்தா ரசிகர்கள் நம்புவோமாக..

Story first published: Sunday, February 13, 2022, 15:30 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+