Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-க்கு ஆரம்பத்திலேயே வந்தது பிரச்சனை கொந்தளித்த பஞ்சாப்,தெலுங்கானா அரசுகள் குழப்பத்தில் பிசிசிஐ

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த பஞ்பாப் மைதானம் தேர்வாகாததிற்கு அம்மாநில அரசே கொந்தளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக லீக் போட்டிகள் நடக்கும் இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

அந்த பட்டியலில் பஞ்சாப்பின் மொஹாலி ஸ்டேடியம் இல்லாததற்கு அம்மாநில அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கவுன்சில் முடிவு

கவுன்சில் முடிவு

மாநில தேர்தல்கள் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவான பார்வையாளர்களுடன் குறைந்த அளவிலான மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறவுள்ளது.

எங்கு நடக்கிறது

எங்கு நடக்கிறது

நடைபெற்று முடிந்த ஆலோசனை கூட்டத்தில் மும்பையில் அனைத்து போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் ஐபிஎல் போட்டிகள் சென்னை, அகமதாபாத், டெல்லி, பெங்களூரு மைதானங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மோதேரா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை குறைவான மைதானங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தங்கள் ஹோம் மைதானத்தை இழக்கிறது.

குழப்பம்

குழப்பம்

இதற்கு அதிருப்தி தெரிவித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில் ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்கள் பட்டியலில் மொஹாலி இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. போட்டிகளை நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநில அரசு செய்து கொடுக்க முடியும். ஐபிஎல்-ஐ அங்கு நடத்த முடியாது என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. எனவே இந்த முடிவை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்லார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இதே போல ஐதராபாத்திலும் போட்டி நடத்தப்படாதது குறித்து அம்மாநில கிரிக்கெட் வாரிய தலைவர் அசாரூதின் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநில அமைச்சர் கே.டி.ராம ராவ், ஐபிஎல்-ஐ நடத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் போட்டியை ஐதராபாத்திலும் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, March 2, 2021, 21:16 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+