Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - முன்னாள் சாம்பியன்களுக்கு டஃப் கொடுக்கும் பஞ்சாப்.. பயிற்சியில் குதித்த தவான் படை

மொஹாலி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கியுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

முதல் அணி

முதல் அணி

அதேபோல். இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டிகளாகும். இதனிடையே அனைத்து அணிகளும் ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியை தொடங்க ஆலோசித்து வருகின்றன. அனைத்து அணிகளும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பயிற்சியை தொடங்க திட்டமிட்டிருந்த சூழலில், பஞ்சாப் அணி முதல் ஆளாக பயிற்சியை இன்றே தொடங்கியுள்ளது.

பஞ்சாப் முனைப்பு

பஞ்சாப் முனைப்பு

ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு கேப்டனை மாற்றும் பழக்கம் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இம்முறை அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 8 அணிகள் ஆடினாலும் 10 அணிகள் ஆடினாலும் 6வது இடத்தை சரியாக பிடிக்கும் வழக்கம் கொண்ட பஞ்சாப் அணி, இம்முறை மாற்றிக் காட்டும் முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக தொகை

அதிக தொகை

அதற்காக கடந்த சீசனில் கேப்டனாக விளையாடிய மயங்க் அகர்வாலை விடுவித்துவிட்டு, சென்னை அணிக்காக ஆடிய சுட்டிக் குழந்தையும் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டருமான சாம் கரனை ரூ.18.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ஒரு வீரருக்காக அதிக தொகையை ஒரு அணி செலவு செய்தது இதுவே முதல்முறையாகும்.

 சாதனை படைப்பாரா தவான்

சாதனை படைப்பாரா தவான்

அதேபோல் பஞ்சாப் அணிக்கு பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிறந்த வீரர்கள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைக்கும் சிறந்த கேப்டன் இல்லாமல் இருந்தது பின்னடைவாக இருந்தது. அதனை ஷிகர் தவான் சரி செய்தால், கடப்பாரை அணி என்ற பார்க்கப்படும் சென்னை, மும்பை அணிகளுக்கே ஐபிஎல் தொடரில் போட்டியளிக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், ஐபிஎல் தொடரின் போதே பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

Story first published: Saturday, February 25, 2023, 16:41 [IST]
Other articles published on Feb 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+