Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெயில், ராகுல் அதிரடி அரைசதம்... பஞ்சாப் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

Recommended Video

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் ஹாட்ரிக் வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதின. இதில், கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் அதிரடி அரைசதத்தில் பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனின் 18வது ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளில் 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் இரண்டு அணிகளின் கேப்டன்களாக தமிழர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணியும் முதல் முறையாக நேரடியாக மோதின.

கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திலும். பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்திலும் இருந்தன.

வலுவான அணிகளை வென்றது

வலுவான அணிகளை வென்றது

பஞ்சாப் அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் டெல்லியை வென்றது. பெங்களூருவிடம் தோல்வியடைந்த பஞ்சாப், அதற்கடுத்த ஆட்டங்களில் மிகவும் வலுவான சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளை வென்றது. ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கியது.

ஹாட்ரிக்கிலும் போட்டி

ஹாட்ரிக்கிலும் போட்டி

அதே நேரத்தில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்ற கொல்கத்தா அணி, சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, அதற்கடுத்த ஆட்டங்களில் டெல்லி மற்றும் ராஜஸ்தானை வென்றது. இந்த அணியும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது.

கிறிஸ் லைன் அசத்தல்

கிறிஸ் லைன் அசத்தல்

கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ, கிறிஸ் லைன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மழையால் ஆட்டம் பாதிப்பு

மழையால் ஆட்டம் பாதிப்பு

பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு 28 பந்துகளில் 29 ரன்கள் தேவை என இலக்கு மாற்றப்பட்டது. லோகேஷ் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிறிஸ் கெயில் 62 ரன்களும், மயாங்க் அகர்வால் 2 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Story first published: Saturday, April 21, 2018, 20:40 [IST]
Other articles published on Apr 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+