நரேன், கார்த்திக் கலக்கல் ஆட்டம்... பஞ்சாபை வென்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா!
Recommended Video

இந்தூர்: ஐபிஎல்லில் இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்துடன், ஆந்தரே ரசலின் அபார பந்து வீச்சில் பஞ்சாப் அணியை வென்றது கொல்கத்தா. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளேஆப் சுற்றை நெருங்கியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
மற்றொரு வெற்றி கிடைத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
புள்ளிப் பட்டியலில் 10 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. அடுத்து விளையாடும் நான்கில் 2ல் வென்றால் சுலபமாக பிளே ஆப் சுற்றுக்கு நுழையலாம்.

நெருக்கடியில் கொல்கத்தா
தலா 10 புள்ளிகளுடன் உள்ள மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் அடுத்து விளையாடும் மூன்று ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் நிலையில் உள்ளன. மும்பை முன்னேறி வருவதால், கொல்கத்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மீண்டும் வெற்றிமுகம்
அடுத்து விளையாடும் மூன்று ஆட்டங்களில் மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பஞ்சாபுக்கு எதிராக கொல்கத்தா அணி களமிறங்கி உள்ளது.

கொல்கத்தா அதிரடி ரன்குவிப்பு
இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. கிறிஸ் லைன் 27, ராபின் உத்தப்பா 24, ஆந்தரே ரசல் 31 ரன்கள் எடுத்தனர். சுனில் நரேன் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாபின் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பிளே வாய்ப்பை தக்க வைத்தது
246 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் அஸ்வின் 45, ஆரோன் பிஞ்ச் 34 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தாவின் ஆந்தரே ரசல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதையடுத்து 31 ரன்களில் வென்ற கொல்கத்தா அணி 12 புள்ளிகளைப் பெற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications