சிக்சர் அடித்த பேட்ஸ்மேன்.. அடுத்த நொடியே களத்தில் சரிந்து மாரடைப்பால் உயிரிழப்பு
பிரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் நகரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பேட்ஸ்மேன் ஒருவர் 6 அடித்து விட்டு அடுத்த நொடியை மாரடைப்பு காரணமாக களத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரோஸ்பூர் நகரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹர்ஜித் சிங் என்ற வீரர் ஒரு பந்தை அபாரமாக சிக்ஸருக்கு தூக்கி அடித்திருக்கிறார்.

பந்தை அடித்து விட்டு மறுமுனையில் இருக்கும் வீரரிடம் பேச பேட்டை எடுத்துக் கொண்டு களத்திற்கு நடுவே வந்த போது திடீரென்று மயங்கி ஆடுகளத்தின் கீழே சுருண்டு விழுந்தார். இதை எடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் களத்திலே உயிரிழந்து விட்டார். இதேபோன்று கடந்த ஜூன் மாதமும் மும்பையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
42 வயதான ராம் கனேஷ் என்ற நபர் சிக்சர் அடித்துவிட்டு உடனே மயங்கி கீழே விழுந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது இதுபோல் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் உடல் அளவிலான பிரச்சனைகளை கவனித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இளைஞர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவரிடம் அறிவுரைகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். வாழ்க்கை நடைமுறை தற்போது மாறி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், மது, சிகரெட் பழக்கங்களை இளைஞர்கள் உடனடியாக விட வேண்டும்.
மாவு சத்துப் பொருட்களை குறைவாக உண்ண வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பு ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளிட்டவை குறித்து சோதனை எடுத்துக்கொண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications