Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க சளைச்சவங்க இல்லன்னு நிரூபிச்ச தென்னாப்பிரிக்க ஜாம்பவான்கள்.. சூப்பரப்பு!

ராய்ப்பூர் : சாலை பாதுகாப்பு உலக தொடரில் நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச ஜாம்பவான்கள் மோதிய நிலையில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி கொண்டுள்ளது.

சாலை பாதுகாப்பு உலக தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது.

முன்னதாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்

ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்

சாலை பாதுகாப்பு உலக தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அரையிறுதி வரை வந்துள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை இந்த தொடரின் மூலம் உலக அளவிலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் தந்து வருகின்றனர். அவர்களின் கேரியரில் அவர்களது ஆட்டங்களை லைவ்வாக பார்க்க முடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச ஜாம்பவான்கள் மோதிய நிலையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்கள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அணியின் ஆன்ட்ரூ புட்டிக் மற்றும் வான் விக் ஆகியோர் முறையே 84 மற்றும் 69 ரன்களை அடித்து சிறப்பான வெற்றியை அணிக்கு அளித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா 16 புள்ளிகள்

தென்னாப்பிரிக்கா 16 புள்ளிகள்

இந்த போட்டியின் வெற்றியை அடுத்து 16 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தலா 20 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களை விளையாடி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை அடித்தது.

ஆன்ட்ரூ, வான் விக் சிறப்பு

ஆன்ட்ரூ, வான் விக் சிறப்பு

அணியின் நிஜாமுதீன் 32 ரன்களையும் அப்தாப் அகமது 39 ரன்களையும் ஹனான் சர்க்கார் 36 ரன்களை குவித்தனர். ஆயினும் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் ஆன்ட்ரூ மற்றும் வான் விக் 19.2 ஓவர்களிலேயே ஆட்டத்தை 161 அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.

Story first published: Tuesday, March 16, 2021, 16:11 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+