PV Sindhu Wedding- சிந்து மற்றும் வெங்கட சாயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மும்பை பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வரும் 22 ஆம் தேதி ஐதராபாத்தில் சேர்ந்த வெங்கடாசாய் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம், காமன்வெல்த் போட்டியின் பதக்கம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் என பல பதக்கங்களை வென்று இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீராங்கனைகளில் அதிக பணம் சம்பாதிக்கும் நபராக பிவி சிந்து விளங்குகிறார். இந்த நிலையில் பிவி சிந்து கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவரால் அது முடியாமல் போனது.இதனால் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்ற உத்வேகத்துடன் பிவி சிந்து இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான அத்தியாயத்தை தொடங்கப் போகிறார்.
பிவி சிந்து ஹைதராபாத் சேர்ந்த தொழிலதிபரான வெங்கட சாய் என்ற நபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
பி வி சிந்து ஆண்டுக்கு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் பிவிக்ஸ் சிந்து 59 கோடி ரூபாய் விளம்பரம் மற்றும் பேட்மிண்டன் பரிசுத்தொகை உள்ளிட்டவையிலிருந்து பெற்றதாக Forbes இதழ் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் பி வி சிந்துவின் கணவரான வெங்கடசாய் யார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்று தற்போது பார்க்கலாம்.
பொசிடஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை ஜிடி வெங்கடேஷ்வரராவ் என்ற தொழிலதிபர் நடத்தி வருகிறார். அவருடைய மகன்தான் வெங்கடசாய். இவர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனதாக இருக்கிறார். வெங்கட சாய் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் வர்த்தக மேலாண்மை துறையில் பட்டம் மற்றும் டேட்டா சயின்ஸ் இல் மாஸ்டர் டிகிரி ஆகியவற்றை படித்திருக்கிறார்.
வெங்கட சாயின் சொத்து மதிப்பு 150 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் புதிய லோகோவை பிவி சிந்து தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Story first published: Wednesday, December 4, 2024, 23:21 [IST]
Other articles published on Dec 4, 2024


Click it and Unblock the Notifications