திறமையான இந்திய பௌலர்களுக்கு தான் இன்னைக்கு கிராக்கி அதிகமா இருக்கும்... சங்ககாரா வெளிப்படை
சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் சென்னையில் சிறிய அளவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஏலம் துவங்கியுள்ளது.
இதில் 292 வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் திறமையான இந்திய பௌலர்களை தேர்ந்தெடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டும் என்று ரா4ஸ்தான் ரயல்ஸ் அணியின் கிரிக்கெட் டைரக்டர் குமார சங்ககாரா தெரிவித்துள்ளார்.

சென்னையில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் சிறிய அளவில் நடைபெறவுள்ளது. தற்போது சென்னையில் ஏலம் துவங்கியுள்ளது. இதில் 292 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.

அணிகள் முனைப்பு காட்டும்
இந்நிலையில் திறமைமிக்க இந்திய பௌலர்களை தேர்ந்தெடுக்க அனைத்து ஐபிஎல் அணிகளும் இந்த ஏலத்தில் முனைப்பு காட்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் டைரக்டர் குமார சங்ககாரா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் ஐபிஎல் ஏலம் என்ற நிகழ்ச்சிக்காக பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மதிப்புமிக்க விஷயம்
அது உமேஷ் யாதவ் அல்லது மற்ற பௌலராக இருந்தாலும் அவர்களை ஏலத்தில் எடுப்பது மிகவும் மதிப்புமிக்க விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிக வீரர்கள் சாய்சில் உள்ளதாகவும் அதிவேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கவனமுடன் செயல்பாடு
இதேபோல பேட்ஸ்மேன்களில் இவரைதான் தேர்ந்தெடுப்போம் என்று என்று குறிப்பாக கூற முடியாது என்றும் ஆனால் அதிகமான பேட்ஸ்மேன்கள் உள்ளதாகவும் தங்களுக்கும் அதிக தேவை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனால் தங்களது தேவைக்கு சிறப்பாக பொருந்துபவரை தேர்ந்தெடுக்க கவனமுடன் செயலாற்ற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications