குவாரன்டைன் பக்கங்கள்... கசங்கிய சட்டை... வசதியான சோபா ... சிறப்பான சீரிஸ்... வாழ்வுதான்!
சிட்னி : ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணியினர் தற்போது குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய குவாரன்டைன் பக்கங்கள் கசங்கிய சட்டை, வசதியான சோபா மற்றும் சிறப்பான சீரிசுடன் கழிவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதேபோல தங்களின் குவாரன்டைன் கதைகளை ஜடேஜா, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பயிற்சிகள் துவக்கம்
ஐபிஎல் 2020 சீசனில் பல்வேறு அணிகளில் இணைந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் நேரடியாக ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்பதற்காக சிட்னிக்கு பயணம் மேற்கொண்டு தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். குவாரன்டைன் மற்றும் சிறிய அளவிலான பயிற்சிகள் என அவர்களது காலம் கழிகிறது.

விராட் கோலி ஆசுவாசம்
இந்நிலையில் தன்னுடைய குவாரன்டைன் டயரீஸ் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் விராட் கோலி. கசங்கிய அயர்ன் செய்யாத சட்டை, வசதியான சோபா மற்றும் பிடித்தமான சீரிசுடன் தன்னுடைய பொழுதுகள் கழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயங்க் அகர்வால் மகிழ்ச்சி
இதனிடையே ரவீந்திர ஜடேஜாவும் தான் நெட் பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னணியில் இசையுடன் அவரது வீடியோ பதியப்பட்டுள்ளது. மயங்க் அகர்வாலும் மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் பயிற்சி வீடியோ
ஷ்ரேயாஸ் ஐயரும் தான் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோவை பின்னணியில் இசையுடன் வெளியிட்டுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் 27ம் தேதி, முதல் ஒருநாள் போட்டி தொடர் சிட்னியில் துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications