“தவான் கையில் தான் எல்லாமே”.. முதல் ஒருநாள் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்.. வெற்றி பெற என்ன வழிகள்?
ட்ரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு புகழ்பெற்ற குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்திய அணியும், தொடர் தோல்விகளில் இருந்து கம்பேக் கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கவுள்ளது.

முதல் போட்டி
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் படை களமிறங்குகிறது. ஏற்கனவே இந்தியாவின் பி அணி தான் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து தொடர்களில் வெற்றி கண்டது என்பதால் இந்த போட்டியின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிட்ச் அறிக்கை
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. குயின்ஸ் பார்க் களமானது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்குமே சம அளவில் ஒத்துழைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 240 ரன்களை அடிக்கும். எனினும் முதலில் 2வது பேட்டிங் செய்யும் அணி தான் 80% வரை வெற்றிகளை கண்டுள்ளது.

நிதானம் வேண்டும்
போர்ட் ஆஃப் ஸ்பின் நகரத்தில் நேற்று முதல் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால், ஆட்டத்தின் முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் இருக்கும். எனவே ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் முதல் சில ஓவர்களுக்கு நிதானமாக நின்று ஆடினால் அதிக ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது.

வெற்றி விவரம்
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் இந்த களத்தில் ஷிகர் தவான் தான் அதிகபட்சமாக 4 சதங்களை அடித்திருப்பதால், இன்றும் அவரின் மேஜிக்கை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications