Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு வந்த கண்டம்.. 4வது டி20ல் தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த அசுர பலம்.. தப்பிப்பது கடினம்!

ராஜ்கோட்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, கடைசியாக நடந்த 3வது டி20 போட்டியில் வெற்றி கண்டது. இதனால் தொடர் 2 - 1 என்ற நிலையில் உள்ளது.

 4வது டி20

4வது டி20

இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு ராஜ்கோட் பகுதியில் நடைபெறவுள்ளது. தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியும், சமநிலை படுத்த வேண்டும் என இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.

எய்டன் மர்க்ரம் விலகல்

எய்டன் மர்க்ரம் விலகல்

இந்த போட்டி குறித்த முதல் நல்ல விஷயம் நேற்று தெரியவந்தது. அதாவது தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் எய்டன் மர்க்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொடரில் இருந்தே வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக சென்றது. இந்திய ரசிகர்களும் நிம்மதியடைந்தனர்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனிங் வீரர் குயிண்டன் டிகாக் கடந்த 2 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாகவும், 4வது டி20ல் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு தலைவலி

இந்திய அணிக்கு தலைவலி

இந்திய களத்தில் குயிண்டன் டிக்காக் இந்திய அணிக்கு எமனாக விளங்கக்கூடியவர். ஐபிஎல் தொடர் மூலம் அவருக்கு இந்திய பவுலர்கள் குறித்தும், பிட்ச்-கள் குறித்தும் நல்ல புரிதல் உள்ளன. எனவே நிச்சயம் இந்திய அணிக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார் எனத் தெரிகிறது.

Story first published: Friday, June 17, 2022, 1:05 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+