Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது... 2வது முறையாக அள்ளிய குவின்டன் டீ காக்

ஜோகன்னஸ்பர்க் : இந்த ஆண்டிற்கான சிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை ஒயிட் பால் கேப்டன் குவின்டன் டீ காக் பெற்றுள்ளார்.

நேற்று எளிய முறையில் நடைபெற்ற கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும் அவர் அள்ளி சென்றுள்ளார். இதனிடையே லாரா வால்வார்ட் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதினை கைப்பற்றியுள்ளார்.

ஆண்டு விருதுகள் வழங்கும் விழா

ஆண்டு விருதுகள் வழங்கும் விழா

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று எளிய முறையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்படும் இந்த விழா, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பையடுத்து மிகவும் எளிமையாக நடத்தப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை ஒயிட் பால் கேப்டன் குவின்டன் டீ காக் பெற்றுள்ளார்.

2 விருதுகளை அள்ளிய குவின்டன்

2 விருதுகளை அள்ளிய குவின்டன்

27 வயதாகும் குவின்டன் டீ காக் இந்த ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை குவின்டன் இரண்டாவது முறையாக பெற்றுள்ளார். கடந்த 2017ல் இந்த விருதினை இவர் முதல் முறையாக பெற்றிருந்தார். கடந்த 2004 முதல் இந்த விருதுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த வீரர் என பாராட்டு

சிறந்த வீரர் என பாராட்டு

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் குவின்டன் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் ஆக்டிங் சிஇஓ ஜாக்குவஸ் ஃபால் குறிப்பிட்டுள்ளார். மேலும் குவின்டன் ஒயிட் பந்து மற்றும் சிவப்பு பந்து என இரண்டிலுமே மிகச்சிறந்த வீரராக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

லாரா வால்வார்ட் அள்ளினார்

லாரா வால்வார்ட் அள்ளினார்

இதனிடையே இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது மற்றும் சிறந்த ஒருநாள் போட்டிகளின் வீராங்கனை விருதுகளை மகளிர் அணியை சேர்ந்த லாரா வால்வார்ட் தட்டி சென்றுள்ளார். இதேபோல ஆண்கள் கிரிக்கெட்டில் பௌலர் லுங்கி நிகிடி சிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரர் விருதை கைகொண்டுள்ளார். டேவிட் மில்லர் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வீரர் விருதை பெற்றுள்ளார்.

Story first published: Sunday, July 5, 2020, 21:49 [IST]
Other articles published on Jul 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+