For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரித்திர நாயகன் அஸ்வின்.. உலக அளவில் ஒரே தமிழர் பெற போகும் பெருமை.. மிரள வைக்கும் ரெக்கார்ட்ஸ்

R Ashwin : மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி, பெங்களூருக்கு டிராவிட், கும்ப்ளே என்று கிரிக்கெட்டில் இந்த நகரங்களுக்கு எல்லாம் அடையாளமாக இருந்த போது, ஸ்ரீகாந்த்துக்கு பிறகு சென்னையின் கிரிக்கெட் அடையாளமாக திகழ்கிறார் அஸ்வின். அஸ்வின் முதல் அறிமுக டெஸ்ட் மேட்ச் விளையாடியது டில்லியில். ( 06. 11. 2011) மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக. இவருடன் அறிமுகம் ஆன வீரர் வேக பந்து பவுலர் உமேஷ் யாதவ்.இவருடன் அறிமுகம் ஆன வீரர் வேக பந்து பவுலர் உமேஷ் யாதவ்.

அஸ்வின் கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் மிக முக்கியமான
மைல்கல்லை, தொடப் போவது 07/ 03/ 2024 அன்று அவர் மைதானத்தில் கால் எடுத்து பதிக்கும் பொழுது சதம் அடித்த பெருமை கிடைக்கும் அவருக்கு. ஆம் அன்று தான் அஸ்வின் தனது 100 வது டெஸ்ட் ஆடப் போகின்ற தருணம் அது.

R Ashwin 100th test - Look Back at this records and achievements

போட்டிகள் நிறைந்த இந்த கால கட்டத்தில் மூன்று வகையான கிரிக்கெட் மேட்ச்சுகள் நடைபெறுகின்றன. ( டெஸ்ட் மேட்ச்சுகள், ஒரு நாள் ஆட்டங்கள், டி 20 விளையாட்டுகள் என்று ) மேலும் விளையாடும் 11 ல் இடம் பெற கடுமையான போட்டி, அனுபவ வீரர்கள், புது இளம் ஆட்டக்காரர்கள், பல்வேறு அழுத்தங்கள், எதிர்பார்ப்புகள், உடன் விளையாட்டில் திறமையாக ஆடி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போன்ற கடுமையான சூழ்நிலையில் விளையாடி சாதனைகள் புரிவது சுலபம் இல்லை.

இவற்றை எல்லாம் எதிர் கொண்டு ஒரு வீரர் 100 வது டெஸ்ட் விளையாடுகிறார் என்பது அந்த வீரரின் திறமை, முழு ஈடுபாடு, கால மாற்றத்திற்கு ஏற்ப தயார் செய்து கொள்வது அதுவும் தொடர்ந்தார் போல், தன்னம்பிக்கை, செயல்பாடு, அணியின் வெற்றிக்கு பங்களிப்பு போன்ற குணங்களின் வெளிப்பாடு ஆகும்.

இவை எல்லாம் கொண்ட ஆர் அஸ்வின் 100 வது டெஸ்ட் ஆடுவது சாலப் பொருந்தும். ஆர் அஸ்வின் கிரிக்கெட் பற்றி சிந்திப்பது மட்டும் அல்லாமல் தேவைக்கு ஏற்ப சோதித்து பார்ப்பதிலும் சூரர். விடாமுயற்சி, விடாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வது, மாற்றி அமைத்துக் கொள்வது, கிரிக்கெட் நிபுணர்களிடம் விவாதிப்பது போன்ற இவரது குணங்கள் இவர் விளையாடும் பொழுது புதுமைகளை புகுத்தவும் அதற்கு உரிய பலன்கள் பெறுவதும் இவரது கிரிக்கெட்டின் மீதுள்ள பற்று மற்றும் ஆர்வத்தை காட்டுகின்றது.

இந்த நிலைமையை அடைய அவர் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார் என்றால் மிகை ஆகாது.ஸ்பின் பவுலிங் அல்லாமல், பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.இது வரையில் 5 சதங்கள் எடுத்துள்ளார்.4 மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், 1 இங்கிலாந்து அணிக்கு எதிராகவும்.

இவரது சிறந்த ஆட்டங்களை மெச்சும்படி இவருக்கு கிடைத்துள்ள 10 ஆட்ட நாயகன் விருதுகள் ஓர் அத்தாட்சி.ஆட்ட நாயகன் விருதை இவருடைய அறிமுக முதல் டெஸ்டிலேயே பெற்று அசத்தியுள்ளார்.ஆர் அஸ்வினின் சில முக்கியமான ரிகார்டுகளை காண்போம்.

இவர் எடுத்த முதல் டெஸ்ட் விக்கெட், மேற்கு இந்திய தீவுகள் வீரர் டார்றேன் பிராவோ ( Darren Bravo ) க்ளீன் போல்ட். ரன்கள் 12.

அறிமுக டெஸ்டில் அஸ்வின் எடுத்தது 9 விக்கெட்டுகள்.

3 - 81 & 6 - 47

ஆட்ட நாயகர் விருது கிடைத்தது.
இந்திய அணி இந்த டெஸ்டில் வென்றது.

இரண்டாவது டெஸ்ட் கல்கத்தாவில்

2 - 49. & 2 - 137

இந்திய அணி வெற்றி.

மூன்றாவது டெஸ்ட் மும்பையில். சிறந்த பவுலர் மட்டும் அல்லாமல் திறமையான பேட்ஸ்மன் என்றும் நிரூபித்த டெஸ்ட்.

மேட்ச் டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 590 ரன்கள் குவித்தன. இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் எடுத்தது 134 ரன்கள்.

பவுலிங்கில் அசத்தினார் அஸ்வின்
5 - 156 & 4 - 34

இந்திய அணி குவித்த 482 ரன்களில், அஸ்வின் எடுத்தது 103.

ஆம். இவரது முதல் டெஸ்ட் சதம்.
ஆல் ரவுண்ட் ஆட்டத்தை பதிவு செய்தார்.

இரண்டாவது ஆட்ட நாயகர் விருது பெற்றார் அஸ்வின்.

06.11.2011 அன்று டெஸ்ட் ஆட துவங்கிய ஆர் அஸ்வின், 23. 02. 2024 அன்று துவங்கிய ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கால கட்டத்தில் சாதித்தவை பற்றி ஒரு பார்வை.

நான்கு கட்டங்களுக்கான விவரங்கள் வருமாறு.

-----------------------------------------------
01
-----------------------------------------------

06.11.2011. - 13.12.2012

12 டெஸ்ட்டுகள்

ரன்கள் 596

விக்கெட்டுகள் 63

சதம். ரன்கள் 103
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகமும்பை

நவம்பர் 2012

விக்கெட்டு ஒரு மேட்சில்
12 - 85
நியூசிலாந்து அணிக்கு எதிராக
ஹைதராபாத்
ஆகஸ்ட் 2012

----------------------------------------------

02
----------------------------------------------
22.02.2013 - 03.12.2015

20 டெஸ்டுகள்

ரன்கள் 608

விக்கெட்டுகள் 113

சதம். ரன்கள் 124
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராககல்கத்தா

நவம்பர் 2013

விக்கெட்டு ஒரு மேட்சில்
12 - 198
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக
சென்னை
பிப்ரவரி 2013

விக்கெட்டு ஒரு மேட்சில்
10 - 160
ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக
காலே
ஆகஸ்ட் 2015

விக்கெட்டு ஒரு மேட்சில்
12 - 98
தென் ஆஃப்ரிகா அணிக்கு எதிராக
நாக்பூர்
நவம்பர் 2015

-----------------------------------------------
03
-----------------------------------------------
21.07.2016 - 06.12.2018

33 டெஸ்டுகள்

ரன்கள் 1157

விக்கெட்டுகள் 166

சதம். ரன்கள் 113
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக

நார்த் சவுண்ட்
ஜூலை 2016

விக்கெட்டுகள் 7 / 83

ஆட்ட நாயகர் விருது

விக்கெட்டு ஒரு மேட்சில்
10 - 225
நியூசிலாந்து அணிக்கு எதிராக
கான்பூர்
செப்டம்பர் 2016

விக்கெட்டு ஒரு மேட்சில்
13 - 140
நியூசிலாந்து அணிக்கு எதிராக
இந்தோர்
அக்டோபர் 2016

விக்கெட்டு ஒரு மேட்சில்
12 - 167.
இங்கிலாந்து
அணிக்கு எதிராக
மும்பை
டிசம்பர் 2016

-----------------------------------------------
04
-----------------------------------------------

02.10.2019. - 23.02.24

34 டெஸ்டுகள்

ரன்கள் 948

விக்கெட்டுகள் 165

சதம். ரன்கள் 106
இங்கிலாந்து அணிக்கு எதிராக

சென்னை
பிப்ரவரி 2021

விக்கெட்டு ஒரு மேட்சில்
12 - 131
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக

ரோசேவு
ஜூலை 2023

----------------------------------------------

Total

Tests Runs Wickets

01.. 12. 596. 63

02.. 20 . 608 113

03.. 33. 1157. 166

04.. 34 948. 165

-----------------------------------------
99. 3309. 507
-----------------------------------------

100 வது டெஸ்டில் ஆடப் போகும் ஆர் அஸ்வின் எடுத்துள்ள 5 சதங்களில் அதிகமான ரன்கள் 124.

அரை சதங்கள் 14
சராசரி ரன்கள் 26.5
இன்னிங்ஸ்கள் 140
நான்கு ரன்கள் 381
ஆறு ரன்கள் 21
பூஜ்ஜியங்கள் 7

99 டெஸ்டுகளில் 187 இன்னிங்ஸ்களில் பந்து வீசியுள்ளார்.

ஆப் ஸ்பின், ஆப் பிரேக், துசாரா, ஓபனிங் பவுலிங் என்று பல வகைகள் போடுவார்.

26012 பந்துகள் வீசியுள்ளார்

ஒரு இன்னிங்சில் 7 / 59
ஒரு மேட்சில் 13 / 140
சராசரி 23.9
24 முறை 4 விக்கெட்டுக்கள்
35 முறை 5 விக்கெட்டுக்கள்
113 LBW முறையில் விக்கெட் எடுத்துள்ளார்
33 கேட்சுக்கள் பிடித்துள்ளார்

10 முறை ஆட்ட நாயகர் விருது பெற்றுள்ளார்.

மேற்கு இந்திய
தீவுக்கள் 2
நியூசிலாந்து 3
ஆஸ்திரேலியா 2
ஸ்ரீலங்கா 1
தென் ஆப்ரிக்கா 1
இங்கிலாந்து 1

2021 டிசம்பர் மாதம் நடைப் பெற்ற மேட்சில்,
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இனிங்க்சில் அபாரமாக பந்து வீசினார் அஸ்வின்.

8 ஓவர்கள்
2 மெய்டன்கள்
8 ரன்கள்
4 விக்கெட்டுக்கள்

இவரது பவுலிங்கில் அவுட் ஆனவர்கள்
ஹென்றி நிக்கோல்ஸ் (7 )
டாம் ப்ளுந்தல் (8 )
டிம் சௌதீ ( 0 )
வில்லியம் சொமெர்வில்லே ( 0 )

ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள், ஒரு சதம் பேட்டிங்கில்

2011 மும்பை டெஸ்ட், மேற்கு இந்திய தீவுக்கள் அணி 5 / 156 & 103 ரன்கள்

2016 நார்த் சவுண்ட் டெஸ்ட், மேற்கு இந்திய தீவுக்கள் அணி 7 / 83 & 113 ரன்கள்

2021 சென்னை டெஸ்ட், இங்கிலாந்து அணி
5 / 43 & 106 ரன்கள்

100 விக்கெடுக்களுக்கு மேல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக எடுத்துள்ளார்.

50 டெஸ்ட் விக்கெட்டுக்கள் தொடங்கி பெரும் பாலான 50 விக்கெட்டுக்கள் இடை வெளி விட்டு 500 விக்கெட்டுக்களை
வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

உதாரணம் 66 டெஸ்டுகளில் 350 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது.

6 கேப்டன்களின் தலைமையில் டெஸ்டுக்கள் விளையாடி உள்ளார்

எம் எஸ் தோனி (22 )
வி கோஹ்லி (55 )
ஏ எம் ரஹானே ( 5 )
கே எல் ராகுல் ( 3 )
வி ஷேவாக் ( 1 )
ஆர் ஜி சர்மா (13 )

சிறு வயது முதல் பல வகை கிரிக்கெட் மேட்ச்சுக்கள், பலதரப் பட்ட அணிகளுக்கு, பல்வேறு மைதானங்களில்.விளையாடிய அனுபவத்தை தேவைக்கு ஏற்ப உபயோகித்து அதிக பட்ச பயன் பெறுவதில் அஸ்வின் ஒரு சிறந்த வீரர்.

ஸ்பின் பவுலிங் போடுபவராக இருந்தாலும், அணிக்கு பவுலிங்கை ஓபன் செய்து தனது முத்திரையை பதிக்க தவறியது இல்லை.இவருடைய பங்கு அளிப்பால் பல மேட்ச்சுக்கள், இந்திய அணி வெற்றிகளை பதிவு செய்துள்ளன.சில டெஸ்ட் மேட்ச்சுக்கள் இவர் விளையாடவில்லை.

ஒரு வேளை தொடர்ந்து ஆடி இருந்தால், அஸ்வின் 100 டெஸ்டுகளில் விளையாடுவது, 500 விக்கெட்டுக்கள் வீழ்த்துவது, ரிகார்டுகள் ஏற்படுத்துவது போன்ற நிகழ்வுகள் நடை பெற்று முடிந்து டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இந்நேரம் இடம் பெற்று இருந்து இருக்கும்.

விரைவில் ஆர் அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு.கிடைக்கும் என்று எதிர் பார்க்கும் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்பு பூர்த்தியாகும் என்று நம்புவோம்.அந்த பதவிக்கு அவரும் அவர் அனுபவமும் தகுதி உடையது.
ஆர் அஸ்வினின் 100 வது டெஸ்டில் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, March 5, 2024, 17:11 [IST]
Other articles published on Mar 5, 2024
English summary
R Ashwin 100th test - Look Back at this records and achievements சரித்தர நாயகன் அஸ்வின்.. உலக அளவில் ஒரே தமிழர் பெற போகும் பெருமை.. மிரள வைக்கும் ரெக்கார்ட்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+