Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை பட்டியலில் 4 இந்திய வீரர்கள் முதலிடம்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் சாதனை.. விவரம்

மும்பை : சர்வதேச டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் 8 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலம் அவர் தன்னுடைய முதல் இடத்தை தவற விட்டார். அதே சமயத்தில் அஸ்வின் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அஸ்வின் முதலிடம்

அஸ்வின் முதலிடம்

இதன் மூலம் தற்போது அஸ்வின் 8 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எஞ்சி உள்ளதால் தமிழக வீரர் அஸ்வின் தன்னுடைய முதல் இடத்தை பலமாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது. முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன் தற்போது ஏழு புள்ளிகள் குறைந்து 859 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது அஸ்வின் அவரைவிட ஐந்து புள்ளிகள் அதிகமாக பெற்று 864 புள்ளிகள் பெற்று இருக்கிறார்.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

இதேபோன்று டெல்லி டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஜடேஜாவும், இரண்டாவது இடத்தில் அஸ்வினும் இருக்கிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

பேட்ஸ்மேன் தரவரிசை

பேட்ஸ்மேன் தரவரிசை

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மார்னஸ் லாபஸ்சேன் முதல் இடத்திலும் , ஸ்மித் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புக் 15 இடங்கள் முன்னேறி தற்போது விராட் கோலியுடன் 16 வது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாகவும் டி20 போட்டியில் நம்பர் ஒன் அணியாகவும் நீடிக்கும் இந்தியா டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இதைப் போன்று டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூரியகுமார் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். முஹம்மது சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும், அஸ்வின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும், ஜடேஜா ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும் இருக்கிறார்கள். மொத்தம் நான்கு இந்திய வீரர்கள் முதல் இடத்தை பிடித்திருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Wednesday, March 1, 2023, 19:58 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+