அஸ்வினை "விரட்டும்" பெண் யார்?
டெல்லி: இந்தியாவின் அஸ்வின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச வீரர்களை மிரட்டி வருகிறார் என்றால் அவரை ஒரு பெண் தொடர்ந்து விரட்டி வருகிறாராம். இதை அஸ்வினே அம்பலப்படுத்தியுள்ளார். அப்பெண்ணின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அஸ்வினுக்கு ரசிகர்கள் அதிகம், அதை விட ரசிகைகளும் அதிகம். அந்த வகையில் ஒரு ரசிகை அவரை தீவிரமாக பின் தொடர்ந்து வருகிறாராம். இதை அஸ்வினே கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த லைவ் சாட் நிகழ்ச்சியின்போது இந்த விவரத்தை வெளியிட்டார் அஸ்வின்.

ஸ்மிரிதி சின்ஹா
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த கேள்வியைக் கேட்டிருப்பது ஸ்மிருதி சின்ஹா. இவர்தான் என்னை டிவிட்டரில் தொடர்ந்து வருபவரா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அஸ்வின்.

ஸ்மிருதி கேட்ட கேள்வி
அந்த ஸ்மிருதி கேட்ட கேள்வி இதுதான் - உங்களது தாக்குதல் ஆயுதங்களின் வரிசையில் புதிதாக ஏதாவது சேர்ந்துள்ளதா என்று கேட்டிருந்தார் ஸ்மிருதி.

அஸ்வின் பதில்
அதற்கு அஸ்வின், பேட்ஸ்மேனின் இன்சைட் எட்ஜ் மற்றும் அவுட்சைட் எட்ஜை சரியாக கணித்து உள்ளும் வெளியுமாக என்னால் பந்தை சுழல விட முடியும். என்னால் இரண்டையும் செய்ய முடியும்.
வேறு உத்தி தேவையில்லை
இப்போதைக்கு வேறு உத்தி தேவையில்லை. இருக்கும் உத்திகளிலும் மாற்றம் பெரிய அளவில் தேவையில்லை. எனது வேகத்தில் சிறுசிறு மாற்றம் வரலாம் என்று கூறியுள்ளார் அஸ்வின்.


Click it and Unblock the Notifications