Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18 ஆண்டுக்கால கும்ப்ளே ரெக்கார்ட் தகர்ப்பு.. புதிய சாதனை படைத்த அஸ்வின்..உலக அளவில் 2வது இடம்

நாக்பூர் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது பேட்டிங்கிற்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாத நிலையில் தான் மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தான் விட்டுக் கொடுத்தனர்.

டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா தலா ஒரு ரன்களில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அஸ்வின் - அக்சர் ஜோடி

அஸ்வின் - அக்சர் ஜோடி

இந்த போட்டியில் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் கூட்டணி அமைத்து சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த ஜோடி தங்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்த போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில் அலெக்ஸ் கேரி மற்றும் ஹாண்ட்ஸ்கோம்ப் ஜோடி அதிரடியாக விளையாடி ஏழாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது.

அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை

அப்போது 33 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த அலெக்ஸ் காரி அஸ்வின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் தனது 450 ஆவது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் கும்ப்ளேவின் 18 ஆண்டுக்கால சாதனையை அஸ்வின் முறியடித்தார். 93 போட்டியில் கடந்த 2005 ஆம் ஆண்டு 450 விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே வீழ்த்தினார்.

உலகளவில் 2வது இடம்

உலகளவில் 2வது இடம்

ஆனால் அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். முதல் இடத்தில் இந்த பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முரளிதரன் இருக்கிறார். அவர் 80 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை ஆறு ரன்களில் அஸ்வின் வீழ்த்தினார். இதேபோன்று ஸ்காட் போலந்து விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அஸ்வின் 16 ஓவர் களை வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

முறியடிப்பாரா அஸ்வின்

முறியடிப்பாரா அஸ்வின்

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 விக்கெட்டுகளை அஸ்வின் இத்துடன் வீழ்த்திருக்கிறார். இன்னும் எட்டு விக்கெட்டுகள் அஸ்வின் எடுத்தால் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை கும்ப்ளே பெற்று இருக்கிறார். அவர் 111 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார் . இந்தத் தொடர் முடிவதற்குள் அஸ்வின் அந்த சாதனையில் தகப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Thursday, February 9, 2023, 18:16 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+