For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"செம" மூவ்.. அஷ்வினை வேறு தொடருக்கு அனுப்பும் இந்திய அணி - "ராஜவியூகம்" அமைத்த ரவி சாஸ்திரி

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது இந்திய அணி. சற்று புத்திசாலித்தனமான முடிவு என்றும் கூறலாம்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

 அதற்கான காரணங்கள்

அதற்கான காரணங்கள்

ஆம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்வி அத்தகைய தாக்கத்தை இந்திய அணியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், தொடர் தொடங்குவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட, இந்திய அணி பல நாட்கள் ஓய்வில் தான் இருந்தது. பிறகு மும்பையில் 14 நாட்கள் குவாரன்டைன், இங்கிலாந்தில் 10 நாட்கள் குவாரன்டைன் என்று முழுக்க முழுக்க ஓய்வு தான். இதனால், எப்போது களத்தில் இறங்கி விளையாடுவோம் என்று இந்திய வீரர்களே ஏங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் புத்துணர்ச்சியுடன் பல்வேறு ஐடியாக்களுடன், ஸ்டிரடாஜிக்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 கிடைத்ததோ ஏமாற்றம்

கிடைத்ததோ ஏமாற்றம்

அதேசமயம், காயத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகி, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடாமல், நேராக ஐபிஎல்-லில் களமிறங்கி சிறப்பாக விளையாடி அசத்திய ஜடேஜா இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியிருந்தார். அஷ்வின், ஜடேஜா என்று இரு பெஸ்ட் ஸ்பின்னர்ஸ், பும்ரா, ஷமி, இஷாந்த், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், என்று அனுபவம் + இளமை வாய்ந்த இந்திய பவுலிங் யூனிட், பலமான பேட்டிங் யூனிட் என்று உச்சக்கட்ட பலத்துடன் களமிறங்கியது இந்தியா. ஆனால், ரிசல்ட் என்னவோ வெறும் தோல்வி மட்டுமல்ல. சரண்டர் தோல்வி.

 நான்கு விக்கெட்டுகள்

நான்கு விக்கெட்டுகள்

எனினும், ஸ்பின் பவுலிங்கில் அஷ்வின் சற்று சிறப்பாகவே செயல்பட்டார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நியூசிலாந்து அணியில் ஒரு ஸ்பின்னர் கூட கிடையாது. முழுக்க முழுக்க Pace சப்போர்ட் பண்ணும் பிட்சில், ஒரு ஸ்பின்னர் 4 விக்கெட்டுகள் எடுப்பதெல்லாம் வேற லெவல். அதுமட்டுமல்ல, நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அந்த 2 விக்கெட்டை கைப்பற்றியதும் அஷ்வின் தான்.

 பிசிசிஐ திடீர் முடிவு

பிசிசிஐ திடீர் முடிவு

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அஷ்வின் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது ஃபார்மை அப்படியே கன்டினியூ செய்யும் விதமாக, இங்கிலாந்தின் கவுண்டி டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதித்துள்ளது. இது உண்மையில் ஸ்மார்ட் மூவ் என்று கூறலாம். ஏனெனில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க, இன்னும் ஒரு மாத காலம் முழுதாக இருக்கிறது,. இந்த சூழலில், அஷ்வின் ஃபார்மை மெயின்டெய்ன் செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த முடிவை எடுத்ததில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக தெரிகிறது. கேப்டன் கோலியிடம் அஷ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி, அஷ்வினை உள்ளூர் போட்டியில் ஆட வைக்கும் சூழலை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 செம வாய்ப்பு

செம வாய்ப்பு

ஜுலை 11 அன்று நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில், சர்ரே அணிக்காக அஷ்வின் விளையாடுகிறார். இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. ஸோ, இந்த போட்டியின் மூலம், இங்கிலாந்து தொடருக்கு முன்பு, அஷ்வினுக்கு நல்ல வார்ம் அப் கிடைத்தது போன்றும் இருக்கும். அதேசமயம், ஓவல் மைதான பிட்ச்சை அனலைஸ் செய்யவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இது நிச்சயம், ஏதாவது ஒரு வழியில் இந்திய அணிக்கு உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Story first published: Wednesday, July 7, 2021, 22:57 [IST]
Other articles published on Jul 7, 2021
English summary
Ashwin Could Play County Match for Surrey July 11 - அஷ்வின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+