பேஸ்புக்கில் உட்கார்ந்து எங்களை திட்டுவது ஈஸி.. இந்திய அணி தோல்வி குறித்து கொதித்து எழுந்த அஸ்வின்
மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் பலரும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஒரு அணியிடம் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆசிய கோப்பை தொடருக்கும் முன்பு இந்திய அணி இவ்வாறு செயல்பட்டு இருப்பது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், இந்திய அணிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இந்த t20 தொடரில் இந்திய அணியிடமிருந்து பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அமர்ந்து கொண்டு சுலபமாக இந்திய அணியை விமர்சிக்கலாம். ஏனென்றால் அவர்கள் டி20 உலக கோப்பை தொடரில் கூட தகுதி பெறவில்லை.
அவ்வளவு எண் 50 உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. ஆனால் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள நான் ஆசைப்படுகிறேன். நான் யார் குறித்தும் பேசவில்லை. யாருக்கும் ஆதரவளிக்கவில்லை. அனைத்துமே இரண்டாம் பட்சம் தான். ஆனால் ஒரு இளம் வீரராக நீங்கள் வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்றால் உங்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும். ஒவ்வொரு வெளிநாட்டு ஆடுகளங்களிலும் சில ரகசியங்கள் இருக்கும்.
அதனை உள்ளூர் வீரர்கள் மட்டும்தான் அறிந்திருப்பார்கள். அதுவும் இளம் வீரர்கள் செல்லும் போது நிச்சயமாக அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். நான் இளம் வயதில் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாட்டுக்கு சென்று விளையாடும் போது பல விஷயங்கள் குறித்து கற்று அறிந்தேன். அதுதான் ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு முதல் அனுபவமாக இருந்தது.
எனவே இந்த தொடரில் விளையாடிய பல இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல பாடத்தை கொடுத்திருக்கும். இங்கிருந்து நிச்சயமாக அவர்கள் முன்னேறுவார்கள். வெஸ்ட் இண்டீஸ்யிடம் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருப்பதால் பலரும் அதனை விமர்சிக்கிறீர்கள். பலரும் கோபமாக இருக்கிறீர்கள். இதை ஒரு வீரனாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் தவறு இல்லை. ஆனால் இந்த முடிவு இரண்டு விஷயங்களை தான் நமக்கு சொல்கிறது. இந்த இளம் வீரர்கள் நிச்சயமாக அனுபவத்தை இந்த தொடரின் மூலம் பெற்று இருப்பார்கள் என அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications