Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் : அஸ்வின் முதல் போட்டியின் போது சிஎஸ்கே பிளேயிங் XI எப்படி இருந்தது?

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 221 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வின் இதுவரை சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ்,டெல்லி, பஞ்சாப், பூனே என 5 அணிகளுக்கு விளையாடி உள்ளார். அஸ்வின் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் அஸ்வின் தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிராக விளையாடினார்.

R Ashwin

இந்த போட்டியில் அஸ்வின் விளையாடிய போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருந்தது என்று தற்போது பார்க்கலாம். தொடக்க வீரர்களாக பார்த்தீவ் பட்டேல் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்தீப் ஹைடன் இருந்தனர். மூன்றாவது வீரராக சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும்,நான்காவது வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப்பும் இடம்பெற்றிருந்தனர்.

ஐந்தாவது வீரராக கேப்டன் தோனியும், ஆறாவது வீரராக நியூசிலாந்து சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேக்கப் ஓரமும் இருந்தனர். ஏழாவது வீரராக தமிழ்நாட்டை சேர்ந்த பத்ரிநாத், எட்டாவது வீரராக டி20 உலக கோப்பை கடைசி ஓவர் வீசிய ஜோஹிந்தர் சர்மாவும் விளையாடினர். ஒன்பதாவது வீரராக இலங்கையைச் சேர்ந்த திலான் துஷாரா இடம்பெற்று இருந்தார்.

பத்தாவது வீரராக அஸ்வினும், 11 வது வீரராக மண்பிரீத் கோனியும் விளையாடினர். இந்த நிலையில் அஸ்வின் தனது கடைசி ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் அணிக்கு எதிராக மே 20 ஆம் தேதி விளையாடினார். அதில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருந்தது என்று தற்போது பார்க்கலாம். தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே ஆகியோர் இருந்தனர்.

மூன்றாவது வீரராக உர்வில் பட்டேல், நான்காவது வீரராக ஜடேஜா, ஐந்தாவது வீரராக பிரவீஸ், ஆறாவது வீரராக சிவம் துபே, ஏழாவது வீரராக தோனி, எட்டாவது வீரராக அஸ்வின், ஒன்பதாவது வீரராக அன்சூல் காம்போஜ், பத்தாவது வீரராக நூர் அகமது, 11-வது வீரராக கலீல் அகமத் ஆகியோர் விளையாடினர். இதில் இம்பேக்ட் வீரராக பதிரானா களமிறங்கியிருந்தார். இந்த இரண்டு அணியிலும் தோனி மற்றும் அஸ்வின் தவிர வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 28, 2025, 19:01 [IST]
Other articles published on Aug 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+