அஸ்வினை சம்பார் என விமர்சித்த நெட்டிசன்.. ஒரே பதிலில் வாயை அடைத்த அஸ்வின்.. வேற லெவல் செய்கை !
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை சாம்பார் என விமர்சித்த நெட்டிசன் ஒருவருக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர்களை பொதுவாக இட்லி சாம்பார் உடன் ஒப்பிட்டு பேசுவது வட இந்தியாவில் வழக்கமாகவே கருதப்படுகிறது.
இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் வட இந்தியர்களை ஏதேனும் ஒரு பெயரை சொல்லி கிண்டல் செய்வதும் விமர்சனம் செய்வதும் வாடிக்கையாகவே சமூக வலைத்தளத்தில் இருக்கிறது.

அஸ்வின் மீது விமர்சனம்
இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் விளையாடிய அஸ்வின் பெரிய அளவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரசிகர்கள் அவர் மீது கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதனால் அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இடம் பெறவில்லை.
இதனை அடுத்து தனது ஓய்வு நேரத்தில் வழக்கம் போல் அஸ்வின் யுடியூப் மற்றும் ட்விட்டர் என பொழுதைக் கழித்து வருகிறார்.

வீரர்களிடையே பேச்சு
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று அமேசான் பிரைமில் நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது அதில் கலந்து கொண்ட நியூசிலாந்து முன்னாள் கேப்டன், பிளமிங் எப்போதெல்லாம் நியூசிலாந்துக்கு இந்திய அணி வீரர்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுகிறது என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக முரளி கார்த்திக் மற்றும் ஜாகிர் கான், 2002 ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விட்டோரி ஒரு ஓவர் கூட வீசவில்லை என கூறினர்.

தக்க பதிலடி
இது ஸ்டூடியோவில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதனை சுட்டிக்காட்டி அஸ்வின் நமது வீரர்கள் சிறப்பாக பதில் அளித்து இருக்கிறார்கள் என்று பாராட்டினார். இதற்கு சம்பந்தமே இல்லாமல் நெட்டிசன் ஒருவர் அஸ்வினிடம் அண்ணா ஒரு பிளேட் இட்லி சாம்பார் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு தக்க பதிலடி தரும் அஸ்வின் "vada "என்று கேள்விக்குறி போட்டு இருக்கிறார். இதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. ஒன்று கேள்வி கேட்டவர் தன்னுடைய ப்ரொபைல் பிக்சராக ரோகித் சர்மாவின் படத்தை வைத்துள்ளார். ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் வடபாவ் உடன் ஒப்பிட்டு கிண்டல் செய்வது வழக்கம். இன்னொன்று வட இந்தியர்களை அந்த வார்த்தை குறிக்கும்.

ரோகித் ரசிகர்கள் எதிர்ப்பு
இதை மனதில் வைத்து அஸ்வின் ஒரே வார்த்தையால் அந்த ரசிகரை ஆப் செய்துள்ளார். இதற்கு தமிழக ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
இட்லி சாம்பார் உடன் ஒப்பிடும் நபர்களுக்கு தக்க பதிலடி கிடைத்திருக்கிறது என்று தமிழக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரோகித் சர்மாவை அஸ்வின் உருவ கேலி செய்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications