Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வேண்டாம்.. ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பும் அஸ்வின்.. வரலாற்று டீல்.. பாக்.வீரருடன் இணைய வாய்ப்பு

சென்னை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாட அவர் முடிவு எடுத்திருந்தார்.

ஆனால் எதிர்பார்த்தபடி சிஎஸ்கே அணியில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. மொத்தமாகவே 9 போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை தான் அவர் விழித்திருந்தார். அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

R Ashwin

இதனால் ஐபிஎல் தொடரிலிருந்தும் அஸ்வின் விலகி இருக்கிறார். மேலும் வெளிநாட்டில் நடைபெறும் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டுவதாக அஸ்வின் கூறியிருந்தார். இந்த நிலையில் அஸ்வின் வெளிநாட்டு தொடருக்கு வருகிறார் என தெரிந்தவுடன் அவரை வாங்க பல்வேறு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இன்டர்நேஷனல் டி20 தொடரில் அஸ்வின் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அதில் அவரை வாங்க பல அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஸ்வினை வாங்க பிக் பேஷ் லீக் தொடரில் உள்ள அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சிட்னி தந்தர்ஸ் என்ற அணி அஸ்வினி வாங்க வரலாற்று சிறப்புமிக்க டீல் ஒன்றை பேசி இருப்பதாகவும், அதற்கு அஸ்வின் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.முதலில் இந்த டிராப்டில் அஸ்வின் தனது பெயரை கொடுக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அஸ்வினுக்கு சிறப்பு அனுமதி அளிக்கும் என தெரிகிறது. அஸ்வின் அப்படி சிட்னி தண்டர் அணிக்காக விளையாடினால் அவர் பாகிஸ்தான் வீரர் சதப்கான் உடன் இணைந்து விளையாட சூழல் ஏற்படும்.

ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே கடும் விரிசல் மற்றும் கைகுலுக்க எழுதப்படாத தடை போன்ற அம்சங்கள் இருப்பதால் அஸ்வின் ஒரே அணியில் சதாப் காணுடன் எப்படி விளையாடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அஸ்வின் பிக் பேஷ் தொடரில் விளையாடினால் இந்த தொடரில் பங்கு பெறும் இரண்டாவது இந்தியர் என்று பெருமையை பெறுவார். ஏற்கனவே முன்னாள் அண்டர் 19 கேப்டன் உன்முகுத் சந்த், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் போட்டிகள் இருந்து விலகிய நிலையில் பிபிஎல், ஐஎல்டி 20 மற்றும் இங்கிலாந்தில் டி 100 ஆகிய மூன்று தொடர்களில் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அஸ்வின் இந்த மூன்று தொடரிலும் வாங்கிய சம்பளத்தை சேர்த்தால் கூட ஐபிஎல் தொடரில் அவர் வாங்கிய சம்பளத்திற்கு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 24, 2025, 17:27 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+