Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 2 வேற லெவல் சாதனை படைக்க போகும் அஸ்வின்.. முழு விவரம்

மிர்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டாக்காவில் நடைபெறுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கு முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டாலும் பந்து வீச்சில் சோபிக்க தவறிவிட்டார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

குறிப்பாக பந்துவீச்சில் 37 ஓர்களை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். அஸ்வின் பந்துவீச்சு மிகவும் இந்திய அணிக்கு முக்கியமாக கருதப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அஸ்வின் பங்கு மிகவும் முக்கியமானது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இழந்த ஃபார்மை பந்துவீச்சில் மீட்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

11 ரன்கள் தேவை

11 ரன்கள் தேவை

அஸ்வின் தற்போது 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 2989 ரகளை அடித்திருக்கிறார். அஸ்வின் இன்னும் 11 ரன்கள் அடித்தால் 3000 ரன்கள் என்ற இலக்கை தொட்டு விடுவார். இதன் மூலம் இந்திய அணியின் கபில்தேவ் ஆஸ்திரேலியா வீரர் சேன் வார்னே, நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லி, தென்னாப்பிரிக்கா வீரர் ஷான் போலக் ஆகியோர் அடங்கிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் அடங்கிய பட்டியலில் இடம்பெற்று விடுவார் .

ஜாம்பவான்களுடன் இடம்

ஜாம்பவான்களுடன் இடம்

மேலும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை தொட இன்னும் ஏழு விக்கெட் தான் மிஞ்சி இருக்கிறது. அஸ்வின் 450 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த மைல் கல்லை குறைந்த போட்டியில் எட்டிய முதல் இந்திய வீரர், உலக அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.அணில் கும்ப்ளே 93 போட்டியில் 450 விக்கெட் வீழ்த்தினார். உலக அளவில் முத்தையா முரளிதரன் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

இதன் மூலம் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. மிர்பூர் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுவதால், அஸ்வின் மேஜிக் எடுபடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதனால் இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா இடம்பெறாததால் பேட்டிங்கிலும் எந்த மாற்றமும் இருக்காது.

Story first published: Wednesday, December 21, 2022, 12:11 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+