Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய சாதனை படைக்க போகும் அஸ்வின்.. கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சாதனையை தகர்க்க வாய்ப்பு.. முழு விவரம்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை முதல் நாக்பூரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆஸ்திரேலியா அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அஸ்வினை சமாளிக்க பலவிதமான பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள்.நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் முழுமையாக விளையாடினால் ஒரு பெரிய சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிக விக்கெட்டுகள்

அதிக விக்கெட்டுகள்

அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். அவர் 20 டெஸ்ட் போட்டிகளை ஆடி 111 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் பிறகு இரண்டாவது இடத்தில் ஹர்பஜன்சிங் 18 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீழ்த்திக்கிறார். இந்த பட்டியலில் அஸ்வின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 18 டெஸ்ட்களில் களம் இறங்கியுள்ள அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

அஸ்வினுக்கு வாய்ப்பு

அஸ்வினுக்கு வாய்ப்பு

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும். இதேபோன்று ஹர்பஜன் சாதனையை முறி அடிக்க ஆறு விக்கெட்டுகள் போதுமானது. மேலும் 100 விக்கெட்டுகளை அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைப்பற்ற இன்னும் 11 விக்கெட் தேவை. இந்த மூன்று சாதனைகளும் சாத்தியம் என்பதால் அஸ்வின் மிகப்பெரிய ரெக்கார்ட் ஒன்றை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

பேட்டிங்கிலும் வாய்ப்பு

பேட்டிங்கிலும் வாய்ப்பு

இதேபோன்று பேட்டிங்கிலும் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களையும் 13 அரை வசனங்களையும் அடித்திருக்கிறார். 88 போட்டிகள் விளையாடி 343 ரன்கள் விளாசி இருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய சுழற் பந்துவீச்சாளர் பட்டியலில் அணில் கும்ப்ளே 512 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்குப் பிறகு தமிழக வீர அஸ்வின் 457 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஜடேஜா vs அஸ்வின்

ஜடேஜா vs அஸ்வின்

ஹர்பஜன் சிங் 410 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், ஜடேஜா 387 ரன்கள் அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் ஜடேஜாவுக்கும் அஸ்வினுக்கும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதில் ஜடேஜா குறைந்தது ஒரு சதம் அடித்தால் கூட இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விடலாம். இதனிடையே நாக்பூர் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய அணி நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆடுகளம்

ஆடுகளம்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஜடேஜா நடு வரிசையில் விளையாடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அஸ்வின் ஜடேஜா அக்சர்பட்டேல் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா களமிறங்கலாம். ஆனால் சுழற் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது தான் தற்போது சிக்கலாக இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் தடுமாறிய நிலையில் ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயான் போன்ற சிறந்த பந்துவீச்சாளர் இருப்பதால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.

Story first published: Tuesday, February 7, 2023, 13:13 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+