Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 ஆண்டுகளில் இல்லாத சாதனை.... சாதனையை முறியடித்து காட்டிய அஸ்வின்... மிகச்சிறப்பு!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. இதில் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்பின்னர் ரவி அஸ்வின்.

இதன்மூலம் கடந்த 100 ஆண்டுகளில் இன்னிங்சின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ள நிலையில் பாலோ ஆன் செய்யாமல் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் துவங்கியுள்ளது. உணவு இடைவேளைக்கு முன்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து துவங்கியது.

முதல் பந்தில் விக்கெட்

முதல் பந்தில் விக்கெட்

இந்த இரண்டாவது இன்னிங்சின் முதல் பந்திலேயே இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை ஸ்பின்னர் ரவி அஸ்வின் வீழ்த்தியுள்ளார். தற்போது இங்கிலாந்து அணியின் 4 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. ஜோஸ் பட்லர் மற்றும் ஓலி போப்பும் ஆடி வருகின்றனர்.

100 ஆண்டு சாதனை

100 ஆண்டு சாதனை

கடந்த 100 ஆண்டுகளில் இன்னிங்சின் முதல் பந்தில் ஸ்பின்னர் ஒருவர் விக்கெட்டை வீழ்த்தியது இதுவே முதல் முறை. கடந்த 1907ல் தென்னாப்பிரிக்க வீரர் பெர்ட் வோக்லர் மற்றும் கடந்த 1888ல் இங்கிலாந்து வீரர் பாபி பீல் ஆகியோர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ள நிலையில் 100 ஆண்டுகளை கடந்து இந்த சாதனை தற்போது அஸ்வினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

31 ரன்களை அடித்த அஸ்வின்

31 ரன்களை அடித்த அஸ்வின்

கடந்த முதல் இன்னிங்சிலும் 146 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரவி அஸ்வின். மேலும் பேட்டிங்கிலும் முக்கியமான நேரத்தில் 31 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் ரோரி பர்ன்ஸ் மட்டுமின்றி டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Monday, February 8, 2021, 14:32 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+