Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்கள விட 10 சதவீதம் அவர் மேல்.. நாதன் லயானை வம்பிழுத்த அஸ்வின்.. இளம் வீரர்களுக்கு பாராட்டு

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை ஜடேஜாவிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய இளம் வீரர்களை வெகுவாக பாராட்டிய அஸ்வின் நாதன் லயானை கிண்டல் செய்யும் விதமாக பேசியிருக்கிறார்.

அறிமுக வீரராக களம் இறங்கிய முர்பி நான்கு டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தார்.

 முதல் சுற்றுப்பயணம்

முதல் சுற்றுப்பயணம்

இது குறித்து பேசிய அஸ்வின் நாதன் லயான் இந்த தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் மற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு முனையில் நெருக்கடியை அதிகப்படுத்தினர். மூர்பிக்கு இந்த தொடர் சிறந்த அறிமுகத் தொடராக அமைந்தது. மூர்பியை குறித்து என்ன பேச போகிறார் என நீங்கள் நினைக்கலாம். அவருக்கு இதுதான் இந்தியாவுக்கு முதல் சுற்றுப்பயணம்.

50 மடங்கு

50 மடங்கு

இந்தியாவில் முதல் முறையாக விளையாடிய நிறைய சுழற் பந்துவீச்சாளர்களை நான் பார்த்திருக்கிறேன். லயன் 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தார். அதற்கு முன்பு இலங்கைக்கும் சென்றிருக்கிறார். ஆனால் மூர்பி இந்தியாவில் முதல்முறையாக விளையாடி நாதன் லயான் விட 10 லிருந்து 50 மடங்கு வரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

ஸ்டம்பை நோக்கி

ஸ்டம்பை நோக்கி

அதற்காக நாதன் லயானை விட இவர் சிறந்த வீரர் என்று நான் கூறவில்லை. முதல் தொடரிலே இவர் எவ்வளவு நெருக்கடியாக விளையாடி இருக்கிறார் என்பது குறித்து தான் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அகமதாபாத் டெஸ்ட்டில் மூர்பி ஸ்டம்பை நோக்கி பந்து வீசினார்.

ஆடுகளம்

ஆடுகளம்

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுழற் பந்துவீச்சாளர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாது. ஆனால் அங்கிருந்து இவர் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறார். குஹான்மென் நன்றாக பந்து வீசி வருகிறார். அவர் பந்து வீசும் முறை சுவாரசியமாக இருக்கிறது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 16, 2023, 23:57 [IST]
Other articles published on Mar 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+